India
வயநாட்டில் 2 நாள் பிரசாரம் செய்கிறார் பிரியங்கா காந்தி!
நாடாளுமன்றத் தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் ஏப்ரல் 23ம் தேதி 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கேரள மாநிலத்துக்கும் அன்று தேர்தல் நடைபெற இருப்பதால் வருகிற 21ம் தேதியோடு பிரசார வேலைகள் ஓய்கிறது.
இதனையடுத்து வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி வயநாட்டில் நாளையும் நாளை மறுநாளும் தீவிர பரப்புரையில் ஈடுபட உள்ளார்.
மேலும், வயநாடு மக்களவைத் தொகுதியில் பெரும்பான்மையான விவசாயிகள் உள்ளதால் அவர்களுடன் பிரியங்கா கலைந்துரையாட உள்ளார்.
முன்னதாக மாநில காங்கிரசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!