India
கர்நாடக கட்டிட விபத்தில் இருவர் பலி,6 பேர் படுகாயம்
கர்நாடகம் மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் உள்ள குமரேஷ்வர் நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன.கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர்.தகவலறிந்து அங்கு போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளில் சிக்கிய பலரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில், கட்டிட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், இடிபாடுகளில் சிக்கிய 40க்கு மேற்பட்டோரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.தார்வாட் கட்டிட விபத்து பற்றி அறிந்த முதல் மந்திரி குமாரசாமி டுவிட்டரில் கூறுகையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என தெரிவித்துள்ளார்
இதனிடையே, உயிரிழந்த 2 பேரின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர். 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்தின் போது கட்டுமானப் பணியாளர்கள் கட்டடத்தில் பணி செய்து கொண்டிருந்ததால், இடிபாடுகளுக்குள் அவர்களும் சிக்கியிருக்கலாம்,எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
Also Read
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!