Election 2024
மக்களவை தேர்தல் முடிவுகள் - படுதோல்வி அடைந்த 13 பா.ஜ.க அமைச்சர்கள் : முழு விவரம்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
எனினும் பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும், அதற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.
இந்த மக்களவை தேர்தலில் 13 ஒன்றிய அமைச்சர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
1.மோகன்லால்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறை இணையமைச்சர் கவுஷல் கிஷோர் தோல்வி.
2. சண்டௌலி தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே 21,565 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
3.திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தோல்வி.
4.லக்கிம்பூர் கேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா 34,329 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
5.பங்குரா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட கல்வித் துறை இணை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் தோல்வி.
6.குந்தி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டா படுதோல்வி.
7. பிதார் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் பக்வந்த் குபா பீடர் தோல்வி.
8. பார்மர் தொகுதியில் போட்டியிட்ட விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி படுதோல்வி.
9. நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட எல்.முருகன் 2,40,585 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
10.கூச் பெஹார் தொகுதியில் போட்டியிட்ட உள்துறை இணை அமைச்சர் நிசித் பிரமானிக் தோல்வி.
11.முசாபர்நகர் தொகுதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் சஞ்சீவ் பல்யான் தோல்வி.
12. அமேதியில் போட்டியிட்ட ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி படுதோல்வி.
13. ஒன்றிய அமைச்சர் முரளிதரண் தோல்வியடைந்தார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!