Election 2024
சூழ்ச்சியால் வெல்லும் மோடி... அருணாச்சல சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு - முன்னிலையில் பாஜக!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை கவர்ந்தனர். மேலும் பாசிச பாஜக அரசின் அவலங்களை எடுத்துரைத்து எதிர்க்கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த சூழலில் அனைத்து தொகுதிகளும் வரும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 2) நடைபெறுகிறது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 60 தொகுதிகளை கொண்ட அருணாச்சல பிரதேசத்தில், பாஜக சார்பில் போட்டியிட்ட 10 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எங்கு காங்கிரஸுக்கு வாக்கு பலம் உள்ளதோ, அங்கே தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து, பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்துள்ளது.
இதையடுத்து தற்போது 50 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அருணாச்சலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 45 தொகுதிகளில் தற்போது பாஜக முன்னிலை வகித்து வருவதாக தெரிகிறது.
=> அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் :
பாஜக - 45
தேசிய மக்கள் கட்சி - 6
தேசியவாத காங்கிரஸ் கட்சி - 3
அருணாச்சல மக்கள் கட்சி - 2
சுயேட்சை - 2
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!