Election 2024
”இன்று இறுதிப் போராட்டம்” : வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி வைத்த வேண்டுகோள் என்ன?
18 ஆவது மக்களவை தேர்தல் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஏப்.19-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவுடன் தேர்தல் தொடங்கியது. பின்னர் அடுத்த அடுத்த கட்ட தேர்தல்கள் நடைபெற்றது. இன்று 7 ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேசம் - 13, பஞ்சாப் - 13, பீகார் - 8, மேற்கு வங்கம் - 9, சண்டிகர் - 1, ஹிமாச்சல பிரதேசம் - 4, ஒடிசா - 6, ஜார்க்கண்ட் - 3 உள்ளிட்ட 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உங்கள் வாக்குகள் மூலம் இறுதிப் போராட்டத்தை நடத்துங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னணி நிர்வாகி ராகுல் காந்தி தனது x சமூகவலைத்தளத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதில், ”இன்று 7 ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாட்டில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது.
கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதற்காக வாக்களிக்க வந்ததில் நான் பெருமைப்படுகிறேன்.
ஆணவத்தின், கொடுங்கோன்மையின் அடையாளமாக மாறியுள்ள பா.ஜ.க அரசாங்கத்தின் மீது உங்கள் வாக்கு மூலம் 'இறுதிப் போராட்டம்' நடத்துங்கள். ஜூன் 4 ஆம் தேதி புதிய விடியல் வரப்போகிறது." தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !