Election 2024
“உங்களுக்கு வெட்கமே இல்லையா?” - மம்தா குறித்த பாஜக வேட்பாளரின் பேச்சுக்கு குவியும் கண்டனம்!
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், 4 கட்ட தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு ஜூன் 1-ம் தேதியோடு தேர்தல் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் பிரசாரத்தின்போது பாஜக வேட்பாளரும் முன்னாள் நீதிபதியுமான அபிஜித் கங்கோபாத்யாய் மம்தா பானர்ஜி குறித்து அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தின் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய அபிஜித் கங்கோபாத்யாய், கடந்த மார்ச் மாதம் நீதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் மேற்கு வங்கத்தின் தாம்லுக் (Tamluk) தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தற்போது இந்த தொகுதிக்கு வரும் 25-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தீவிரமாக தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், நேற்று கிழக்கு மிட்னாபூரின் சைதன்யபூர் என்ற இடத்தில் பிரசாரம் மேற்கொண்ட அபிஜித் கங்கோபாத்யாய், "மம்தா பானர்ஜி அவர்களே உங்கள் விலை ரூ.10 லட்சமா?" என்று அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
இந்த நிலையில் மம்தா குறித்து பேசிய பாஜக வேட்பாளர் அபிஜித்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் ஒரே பெண் முதல்வர் பற்றி பாஜக வேட்பாளர் அபிஜித் கங்கோபாத்யாய் கேவலமாக கூறியது கண்டனத்திற்குரியது. இதுகுறித்து ஒரே இரவில் திடீரென பெண்கள் உரிமை சாம்பியனாக மாறும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட எந்த ஒரு பாஜக தலைவர்களும் ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு (பாஜக) வெட்கமே இல்லையா?” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சாந்தனு சென், “இப்போது பாஜக வேட்பாளராக இருக்கும் முன்னாள் நீதிபதி, ஒரு பெண் முதல்வரை இழிவுபடுத்த இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது வெட்கக்கேடானது. பாஜக ஆட்சியில் பெண்கள் இப்படி அவமதிக்கப்படுவார்கள் என்பது பாஜகவின் உத்தரவாதம்” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே