Election 2024
20 மணி நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அரவிந்த் கெஜ்ரிவால் : டெல்லியை அதிரவைத்த தொண்டர்கள்!
ஒன்றிய பா.ஜ.க அரசு தங்கள் ஆட்சி செய்யாத மாநிலங்களில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை வைத்து மிரட்டி வருகிறது. அப்படிதான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மதுபான கொள்கை வழக்கில் சிறையில் அடைத்தது.
கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக ஜாமின் கூட கிடைக்க விடாடல் அவரை சிறையில் வைத்திருந்தது ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசு. இதையடுத்துதான் உச்சநீதிமன்றம் நேற்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதையடுத்து இன்று ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் இன்று தொண்டர்களிடையே உரையாற்றினார். பின்னர் இன்று மாலை டெல்லி மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்மேற்கொண்டார். அப்போது ஆம் ஆத்மி தொண்டர்கள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது பிரச்சாரத்தில் பேசிய அரவிந்த கெஜ்ரிவால், ”நான் சிறையிலிருந்து வெளியே வந்து 20 மணி நேரம் ஆகிறது. பலரிடம் போனில் பேசினேன். ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், உ.பி ஆகிய மாநிலங்களில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. ஜூன் 4ம் தேதி இந்திய கூட்டணி ஆட்சியமைக்கும்.
எங்களுடைய வேலைகளை பா.ஜ.க நிறுத்த பார்க்கிறது. இது நாட்டிற்கு நல்லதல்ல. இது சர்வாதிகாரம். இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் போராட வேண்டும். சர்வாதிகாரத்திற்கு எதிராக நான் போராடுகிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
"கனமழையை சமாளிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் என அனைவரும் தயார் நிலையில் உள்ளோம்" - துணை முதலமைச்சர் உதயநிதி!
-
"பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிமுகவே முழுமையாக ஒப்புக்கொள்ளவில்லை" - முரசொலி விமர்சனம்.
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !