Election 2024
தேர்தலுக்கு முன்பாக வெளியான ஆபாச வீடியோக்கள் : சர்ச்சையில் பாஜக கூட்டணி வேட்பாளர் - பரபரப்பான கர்நாடகா !
நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி முதற்கட்டமாக நடைபெற்ற நிலையில், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் கடந்த 26-ம் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் JDS கட்சியின் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா (Prajwal Revanna) மீண்டும் போட்டியிட்டார்.
முன்னாள் பிரதமர் HD தேவகவுடாவின் பேரனும், ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியாக இருந்து வருகிறார். இந்த சூழலில் தற்போது நடைபெறும் தேர்தலில் JDS கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பிரஜ்வல் பல பெண்களுடன் சேர்ந்து இருப்பது தொடர்பாகவும் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகளும் எழுந்தது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், அவர் ஜெர்மனி நாட்டுக்கு தப்பித்து சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்கு சிறப்பு புலனாய்வுக்கு குழு (SIT) அமைக்க கர்நாடக மாநில முதலமைச்சார் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், பிரஜ்வல் வெளிநாட்டுக்கு பறந்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!