Election 2024

NDA அரசாக மாறிய மோடி அரசு... பாஜக பிரசாரத்தில் வியக்கத்தக்க மாற்றம்... தோல்வி பயத்தில் தவழும் பாஜக!

நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக, மோடி மேற்கொள்ளும் அனைத்து பிரசாரங்களில் ஆரம்பித்தல் 400 இடங்களில் வெற்றிபெறுவோம் என்று கூறி வந்த நிலையில், கள ஆய்வுகள் எதிராக இருப்பதை உணர்ந்தபிறகு அதனை தற்போது கூறுவதில்லை.

மக்கள் மத்தியில் இந்தியா கூட்டணிக்கு மிகுந்த ஆதரவுகள் இருந்து வரும் நிலையில், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த எண்ணி, அதற்கான வேலைகளை செய்து வருகிறார். அந்த வகையில் மோடியும், பாஜகவினரும் மதம் சார்ந்து மட்டுமின்றி, வெறுப்புணர்வை விதைக்கும் விதமாகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மோடி தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் இராமர் கோவில், இந்து மதம் உள்ளிட்டவையை குறிப்பிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாமியர் மீது வெறுப்பு பிரசாரம் மேற்கொண்டார். மோடியின் பேச்சுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், தனது பேச்சை மாற்றிக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் மதம் சார்ந்து வெறுப்பு பேச்சை மட்டுமே மோடியும், பாஜகவும் பேசி வருகிறது. அதோடு பாஜகவினரும், மோடியும் மோடி அரசு, பாஜக அரசு என்றே கூறி வந்த நிலையில், தற்போது NDA அரசு என்று கூறி வருகிறது.

மோடியின் இந்த பெரிய மாற்றம் பாஜகவுக்கும், மோடிக்கும் உள்ள தோல்வி பயத்தையே வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி-யும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியானது. ஆனால் ஏப்.19 வரை காங்கிரஸ் அறிக்கையை தனது பிரச்சாரங்களில் மோடி புறக்கணித்து வந்தார். முதற்கட்ட தேர்தல் முடிந்தபிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தனது பிரச்சாரங்களில் மோடி பயன்படுத்தி வந்தார். முதற்கட்ட தேர்தலுக்கு பிறகு மோடியின் பேச்சில் வியக்கத்தக்க மாற்றம் வந்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் 2ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 'மோடி அரசு' என்று கூறிவந்த பாஜகவினர் நேற்று முதல் 'NDA அரசு' எனக் கூறி வருகின்றனர்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மத உணர்வுகளை தூண்டும் வகையில் பேச்சு : பிரதமர் மோடி மீது தமிழ்நாட்டில் வழக்குப்பதிவு!