Election 2024
ராம நவமியில் மசூதியை நோக்கி பாஜக பெண் வேட்பாளர் செய்த செயலால் அதிர்ச்சி: தெலங்கானாவில் அடுத்தடுத்து ஷாக்!
நாடாளுமன்ற தேர்தல் நாளை (19.04.2024) தொடங்கவுள்ள நிலையில், முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் நேற்றுடன் பிரசாரம் நிறைவடைந்தது. முன்னதாக தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தின்போது, சாதி, மதம் உள்ளிட்ட எதையும் வைத்து பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஆனால் பாஜக அதையும் மீறி மதங்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
அண்மையில் கூட பிரதமர் மோடி சீக்கிய, இந்து உள்ளிட்ட மதங்களை வைத்து பிரசாரம் மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசன் எவ்வழியோ...என்ற பழமொழிக்கு ஏற்ப, மோடியின் ஆதரவாளர்களும் அதே போல் மதங்களை வைத்தே பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது தெலங்கானா பாஜக வேட்பாளர் ஒருவர் ராம நவமி நிகழ்ச்சியில் பிரசாரம் மேற்கொண்டதோடு, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பாஜக சார்பாக மாதவி லதா போட்டியிடுகிறார்.
இந்த சூழலில் நேற்று நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், மதம் சார்ந்த கோஷங்களை எழுப்பினார். மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் அருகில் மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியை நோக்கி, பாஜக வேட்பாளர் மாதவி, வில் - அம்பு எய்வது போல் செய்கை காட்டியுள்ளது பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி கண்டங்களை எழுப்பியுள்ளது. பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்துள்ளது. முன்னதாக தெலங்கானா கோஷமஹால் சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ டைகர் ராஜா சிங், போலீசார் அனுமதி வழங்காததையும் மீறி, ராம நவமி நிகழ்ச்சியை நேற்று நடத்தியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹிந்துத்வ அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் கொடியை பயன்படுத்தியதோடு, தேசிய கொடியையும் பயன்படுத்தியுள்ளனர். இதுவும் தற்போது கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!