Election 2024
“இதுதான் மோடி குடும்பத்தின் செயலா?”: பரப்புரையில் பெண்ணுக்கு முத்தமிட்ட பாஜக வேட்பாளர் -குவியும் கண்டனம்!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுடன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா வடக்கு தொகுதியின் வேட்பாளராக ககென் முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தனது தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதோடு வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சஞ்சல் பகுதியில் அமைந்துள்ள சிஹிபூர் என்ற கிராமத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.
அந்த சமயத்தில் இவர், அங்கிருந்த இளம்பெண்ணிடமும் வாக்கு சேகரித்து, அவருக்கு திடீரென முத்தமிட்டார். இது தொடர்பான புகைப்படம் தற்போது வைரலாகி பல கண்டனங்களை எழுப்பி வருகிறது. மேலும் ”’மோடியின் குடும்பம்’ என்று கூறிக்கொண்டு வாக்கு கேட்டு வருபவர், நமது வீட்டு பெண்ணுக்கு செய்யும் வேலையா இது” என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விமர்சித்து கேள்வியும் எழுப்பியுள்ளது.
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. மேலும் பாலியல் புகாரில் சிக்கிய பல பேரில் பாஜகவினரும் உள்ளனர். அதோடு அண்மையில் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரில் பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சிக்கினார்.
பாஜக ஆளும் மணிப்பூரில், கலவரத்தின்போது 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சாலையில் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில பாஜக முதல்வர், "இது அடிக்கடி நிகழும் சம்பவங்கள்தான். அதில் ஒன்றுதான் இப்போது வெளியாகியுள்ளது" என்று பொறுப்பில்லாத வகையில் பேசினார்.
சிறுமி ஆசிபா, ஹத்ராஸ் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் என தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பல இன்னல்கள், கொடுமைகள், சிக்கல்கள் அரங்கேறி வரும் நிலையில், தற்போது பொதுவெளியில் வாக்கு சேகரிப்பின்போதே பாஜக வேட்பாளர் இளம்பெண்ணுக்கு முத்தமிட்ட நிகழ்வு கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!