Election 2024
“Life முழுக்க கோர்ட்டுக்கு அலைய வச்சிருவேன்” - அதிகாரிகளை மிரட்டிய பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் !
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்ட எதையும் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அவர்கள் மீது தக்க நடவடிக்கை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், போலீசார், கண்காணிப்பு நிலைக்குழுவினர் என அனைவரும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு கோபிசெட்டிபாளையம் பகுதியிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட நேரத்தில் திருப்பூர் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம், தனது காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காரையும் சோதனையிட தேர்தல் அதிகாரிகள் முயன்றனர். அப்போது அவர் அதிகாரிகளிடம் எடுத்தெரிந்து பேசியுள்ளார்.
இதனால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், அதிகாரிகள் அவரது காரை சற்று ஓரமாக நிறுத்துமாறு கூறியுள்ளனர். இதனால் கோபமடைந்த முருகானந்தம், அதிகாரிகளை மிரட்டியுள்ளார். மேலும் போலீஸ் அதிகாரியையும், நிலைக்குழுவினரையும் "உங்கள் பெயர் என்ன?, என்னவாக இருக்கீங்க?" என்றெல்லாம் அதிகார தொனியில் மிரட்டலாக கேட்டார்.
அவரது கேள்விக்கும் அதிகாரிகள் டிராபிக் ஆகும் என்பதால்தான், காரை ஓரமாக நிறுத்த சொன்னோம் என்று பதில் கூறவே, அதற்கு "மரியாதையாக பேசுங்க.. இல்லேனா கோர்ட்டுக்கு அலைய வைத்து விடுவேன். சரியா?" என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து அவரது வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பாஜக வேட்பாளர் தனது அதிகார திமிரால், கடமையை செய்த அதிகாரிகளை மிரட்டுவது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி கண்டனங்களை எழுப்பி வருகிறது. தற்போது அவர் மீது குன்னத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!