Election 2024
திருச்சியில் போட்டியிடும் ம.தி.மு.க : வேட்பாளர் யார்?
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
1. தி.மு.க. (DMK) - 21
2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)
3. ம.தி.மு.க. (MDMK) - 1
4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2
5. சி.பி.ஐ. (CPI) - 2
6. வி.சி.க. (VCK) - 2
7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1 - என 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியில் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள திருச்சி மக்களவைத் தொகுதியில் துரை வைகோ போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!