DMK

அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டபேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று நீதி நிர்வாகம், சிறைகள், சீர்த்திருத்தப் பணிகள், சட்டத்துறை மற்றும் எரிசக்திதுறை, மதுவிலக்கு மற்றும் ஆய்த்தீர்வைகள் மீதான மானிய கோரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில், அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்புகளை 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட காலம், பணிநீக்க காலம் வேலை நாட்களாக கருதப்படும்.

சத்துணவு சமையல் ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்.

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும்.

கடும் நெருக்கடியான சூழல் இருப்பினும் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்.

பணியின் போது காலமான அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி மூலம் விரைவில் தேர்வு நடத்தப்படும்.

ஓய்வு பெறும் நாளில் அரசு பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கத்தில் வைக்கும் நடைமுறை தவிர்க்கப்படும்.

போராட்ட காலத்தில் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும்.

ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

புதிதாக அரசு பணியில் சேருவோர், பதவி உயர்வு பெருவோருக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படும்.