DMK
‘கலைஞர் மறையவில்லை; கண் முன் தலைவர் வடிவில் மு.க.ஸ்டாலின் நிற்கிறார்’ : நா தழுதழுத்து கலங்கிய துரைமுருகன்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க உள்ளிட்ட முன்னணி கட்சிகள், வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தீரர்கள் கோட்டமாம் திருச்சியில் தொலைநோக்குப் பார்வை கொண்ட - தமிழகத்தின் அடுத்த பத்தாண்டுகளுக்கான செயல்திட்டங்கள் குறித்து இலட்சியப் பிரகடனத்தை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் "விடியலுக்கான முழக்கம்" என்ற பொதுக்கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
முன்னதாக பொதுக்கூட்டத்தை வாழ்த்தி பேசிய பொதுச்செயலாளர் துரைமுருகன், “என் வாழ் நாளில் பார்த்திராத பிரம்மாண்ட மக்கள் கூட்டத்தை பார்க்கிறேன். தமிழக மக்களுக்கு நன்மை செய்தது மட்டுமல்லாமல்; தமிழக முதல்வராகி ஜனநாயகத்தை காக்கும் புனிதப்போரை தொடங்குவார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
எந்த மாநிலத்திலாவது ஒரு எதிர்க்கட்சி தலைவர் இவ்வளவு பெருமைப்பட்டது உண்டா? அந்த பெறுமையை தேடி தந்தவர் நம் தலைவர்தான். பெரியார் இல்லாத குறையை, அண்ணா இல்லாத சோகத்தை, தலைவர் கலைஞர் இல்லாத வருத்தத்தை நீக்கி எங்களையெல்லாம் கட்டிக்காக்கும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தையும் வாழ வைக்கவேண்டும்” என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எழுச்சியுரைக்கு பின்னர் மேடையில் இருந்த பொதுச்செயலாளர் துரைமுருகன், நா தழுதழுத்து கண்கலங்கிய நிலையில், நம்முடைய தலைவர் கலைஞர் மறைந்துவிட்டார் என எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் மறையவில்லை. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வடிவில் இங்கு நம்முடன் தான் இருக்கிறார்.
வயதில் மூத்தவன் என்ற முறையில், அவரை கலைஞர் நிலையில் இருந்து வாழ்த்துகிறேன். எந்நாளும் வாழவேண்டும் என வாழ்த்துக்கிறேன்” என தெரிவித்தார்.
பொதுச்செயலாளர் துரைமுருகனின் இந்த பேச்சு காண்போரை கண்கலங்கச் செய்ததோடு தலைவர் மு.க.ஸ்டாலினை குறித்து பெருமையடையவும் செய்துள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!