DMK
தேர்தல்2021: விருப்ப மனு தாக்கல் செய்ய திமுக நிர்வாகிகள் தீவிரம்.. தொண்டர்களால் நிரம்பிய அண்ணா அறிவாலயம்!
தமிழகம், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளோர் பிப்ரவரி 17-ம் தேதி முதல் மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார்.
அதன்படி, பிப்ரவரி 17-ம் தேதி முதலே தி.மு.க நிர்வாகிகள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்று, அவற்றை சமர்பித்து வருகின்றனர். 8-வது நாளான இன்று ஏராளமான தி.மு.க நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். விருப்ப மனுக்களை பெறுவதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னையில் குவிந்துள்ளனர். இதனால், அண்ணா அறிவாலயம் பல்லாயிரக்கணக்கான தொண்டர்களால் நிரம்பி வழிகிறது. மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தங்களது தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமானோர் மனு அளித்தனர். தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறிவாலயம் மேலாளர்கள் பத்மநாபன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம் விருப்ப மனுவை தாக்கல் செய்தனர்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் உடனிருந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொதுச் செயலாளர் துரைமுருகன், அ.தி.மு.கவின் தற்போதைய அறிவிப்புகள் வெத்து வேட்டு அறிவிப்புகள் என்று தெரிவித்தார். 234 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றிபெறும் என்றும் அவர் கூறினார்.
தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு , முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், கார்த்திக் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுவை தாக்கல் செய்தனர்.
இதேப்போல் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் விருப்ப மனுத்தாக்கல் செய்தனர். தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனுவை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வருகின்ற 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Also Read
- 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
 - 
	    
	      
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!