DMK
100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு 3 மாதமாக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்? - TR.பாலு
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் கிராமப் புற ஏழை எளிய மக்கள் தங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் முதல் மூன்று மாதங்களாக ஊதியம் அளிக்கப்பட வில்லை என்று திமுக நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்களில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு திமுக பொருளாளரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு எம். பி. இன்று (1.1.2021) எழுதி உள்ள அவசரக் கடிதம் வாயிலாக இந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக டி.ஆர் பாலு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
“திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தி, அவை வாயிலாக கிராமப்பகுதி மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து வருகிறது. மக்கள் குறைகேட்கும் இக்கூட்டங்களில் பங்கேற்கும் பல்வேறு மாவட்டங்களில், கிராமப் பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்கள், அக்டோபர் மாதம் முதல் சென்ற மூன்று மாதங்களாக தங்களுக்கு ஊதியம் அளிக்கப்பட வில்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
நூறு நாள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் இந்த கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டம் ஊரகப் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வருவாயை உறுதிப்படுத்தும் திட்டமாகும். இதில் பணியாற்றிடும் மக்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்காமல், அதுவும் மூன்று மாதங்களாக வழங்காமல் தாமதம் செய்வது அந்த ஏழைத்தொழிலாளர்களின் அன்றாட வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் மறுத்து சிதைப்பதுடன் அவர்களை ஆரிருளில் தள்ளிவிடும் கொடுமை ஆகும்.
எனவே, இந்த பிரச்சினையை மத்திய அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு தேவையான நிதியை வழங்கி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றி வரும் அனைவருக்கும் மூன்று மாதங்களாக தராமல் நிறுத்தி வைக்க பட்டுள்ள ஊதியம் அனைத்தையும் வழங்கிட வேண்டும்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!