DMK

திமுக MLAக்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ்: அதிமுக அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் ரிட் மனுத்தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 19.07.2017 அன்று குட்கா பாக்கெட்டுகள் மற்றும் புகைப்படங்கள் காட்டப்பட்டது தொடர்பாக உரிமைக்குழு நோட்டீஸ் வழங்கியதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்த ரிட் மனு மீதான வழக்கில் கடந்த 25.08.2020 அன்று, மாண்புமிகு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் மாண்புமிகு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற முதல் அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 07.09.2020 அன்று கூடிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையிலான உரிமைக்குழு, 19.07.2017 (மூன்றாண்டுகளுக்கு முன்னர்) அன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மீண்டும் விவாதித்ததாகக் கூறி தமிழகச் சட்டப்பேரவைச் செயலாளர், தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, 14.09.2020 அன்று தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புது நோட்டீஸ்களின் நோக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களை நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதில் இருந்து தடுப்பதும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தவறாகக் கையாண்ட விவகாரத்தைச் சட்டமன்றத்தில் எழுப்புவதைத் தவிர்க்கவுமே என்பது தெளிவாகிறது.

எனவே, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் இந்தப் புதிய நோட்டீஸ்களை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் புதிய ரிட் மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர்.

Also Read: “கல்வித்துறையை காவி மயமாக்குகிறது மோடி அரசு” - பல்கலை.,-ல் பாஜக நிர்வாகி நியமனத்துக்கு திமுக MLA கண்டனம்!