DMK
"தி.மு.க எப்போதும் துணை நிற்கும்” - ‘ஒன்றிணைவோம் வா’ பயனாளிகளோடு உரையாடிய மு.க.ஸ்டாலின்! #Corona
தி.மு.க முன்னெடுத்து சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெற்ற பொதுமக்களுள் 50 பேரிடம் இன்று காணொளிக் காட்சி மூலம் உரையாடினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
கொரோனா பேரிடர் காலத்தில் பசியால் வாடும் ஏழை - எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவும் முதியோர், நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவும் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தி உடன்பிறப்புகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.
‘ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள, பொதுமக்களுக்கான உதவி எண்ணான "90730 90730" என்ற அலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் பிரச்னைகளுக்கு தீர்வுகள் எட்டப்பட்டு, உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று (25-04-2020) மாலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், 'ஒன்றிணைவோம் வா' செயல்திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பயன்பெற்ற பொதுமக்களுள் 50 பேரிடம் காணொளிக் காட்சி மூலம் உரையாடினார்.
அப்போது, அவர்களின் நலன் விசாரித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்குக் கிடைத்த உதவிகள் குறித்தும், அவர்கள் பகுதியில் கொரோனா நோயின் தாக்கம் மற்றும் ஊரடங்கு குறித்தும் விசாரித்தறிந்தார்.
பின்னர், ஊரடங்குக் காலத்தில் அத்தியாவசியத் தேவைகள் தவிர்த்து பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தியதோடு, "தமிழக மக்களுக்கு தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்" என உறுதியளித்தார்.
Also Read
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!