DMK

“ஜனநாயகத்தை மீட்டெடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்” - கனிமொழி MP பேச்சு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மகளிர் அணி, தொண்டரணி, பிரசாரக் குழு சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், கழக கொள்கைப்பரப்பு செயலாளர் ஆ.ராசா எம்.பி, மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி பங்கேற்று தி.மு.கவில் பல ஆண்டுகள் பணியாற்றிய மகளிரணியைச் சேர்ந்த பலருக்கு காசோலையும், 50க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.

பின்னர், மேடையில் பேசிய கனிமொழி எம்.பி, பேராசிரியர் உடல் நலக்குறைவால் இருக்கும் போது தன்னுடைய பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்த போதும், இந்த நிகழ்ச்சிக்கு அனுமதியளித்த தலைவர் தளபதிக்கும், மூத்த தலைவர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

எதிர்காலம் குறித்த கேள்விக்குறியோடு இன்று நாட்டின் நிலமை உள்ளது. மக்களை பிளவுபடுத்தும் வகையிலான சட்டங்களையே இயற்றும் மத்திய அரசை கொண்டுள்ள காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். நாட்டின் தலைநகர் பற்றி எரியக்கூடிய சூழலில் உள்ளது இந்த நாடு. மத்திய அரசின் மோசமான சட்டங்களுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் சாதிக்கும் மாநில அரசைக் கொண்டுள்ளோம்.

ஆனால், நாட்டையும், நாட்டு மக்களையும் பிரிக்கும் எந்த செயலுக்கும், சட்டங்களுக்கும் எதிராக கொடுக்கக் கூடிய குரலாக உள்ளது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் குரல். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என காத்திருந்து கேட்டப்பிறகு சொல்லக் கூடியாக தி.மு.க. தலைவர் ஒருபோதும் இருந்ததில்லை. மத்திய அரசுக்கு எதிராக அறிவித்த போராட்டத்தை கைவிடும் படி, ஆளுநரே அழைத்து திமுக தலைவரிடம் கேட்டுக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய ஆளுமையை நிலைநிறுத்திவர் தளபதி மு.க.ஸ்டாலின்.

ராஜராஜ சோழனின் மகன ராஜேந்திர சோழன் எப்படி கங்கையை மீட்டு கங்கை கொண்ட சோழன் என அழைக்கப்பட்டாரோ அதேபோல, இந்தியாவில் தேர்தலில் ஜனநாயகத்தை மீட்டெடுத்து கங்கை கொண்ட சோழனாக திகழ்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

நாட்டில் நடக்கும் பிரச்னைகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்ன சொல்கிறார் என மற்ற மாநில அரசியல் தலைவர்கள் உற்று கவனிக்கக் கூடிய வகையில் தமிழகத்தையும், தி.மு.கவையும் தலைநிமிரச் செய்யக்கூடியவர் தலைவர் ஸ்டாலின். நாடே பற்றி எரியக்கூடிய சூழல் தற்போது நிலவுகிறது என்றால் இதற்கெல்லாம் முக்கிய காரணமாக விளங்குகிறது அ.தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சியும் சிஏஏவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகள். அவர்களின் வாக்குகள் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்த சட்டத் திருத்தமே வந்திருக்காது.