DMK
வேலூரில் தி.மு.க வெற்றி சாதாரணமானது தானா? : கடந்தகாலம் சொல்லும் உண்மை!
சிறுபான்மையினர் அதிகமுள்ள தொகுதியான வேலூரில் தி.மு.க குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றுள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க-வின் சிறுபான்மையின விரோதப் போக்கு, எடப்பாடி பழனிசாமி அரசின் மோசமான ஆட்சி ஆகியவை இந்தத் தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கவில்லை எனவும், எதிர்ப்பு வாக்குகளை தி.மு.க பயன்படுத்தத் தவறிவிட்டது என்றும் பல்வேறு விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
ஆனால், தி.மு.க-வின் 8 ,141 வாக்குகள் வித்தியாச வெற்றி, அமோக வெற்றியே என்பதை கடந்த தேர்தலோடு ஒப்பிடுகையில் உணர முடியும்.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க - 3,83,719 வாக்குகள் பெற்றது. பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம் பெற்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பெற்ற வாக்குகள் 3,24, 326.
அந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி வேட்பாளர் மூன்றாம் இடத்தையே பெற முடிந்தது. அவர் பெற்ற வாக்குகள் 2,05,896. காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் 21,650.
இதன்படி, அ.தி.மு.க-வுக்கும், பா.ஜ.க-வுக்கும் விழவேண்டிய வாக்குகளைப் பொருத்திப் பார்த்தால் இந்தத் தேர்தலில் ஏ.சி.சண்முகம் பெற்றிருக்க வேண்டிய வாக்குகள் 7,08,145. ஆனால் பெற்றது, 4,77,193 வாக்குகள் மட்டுமே. இப்படியாக, அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி இழந்தது 2,30,946 வாக்குகள்.
கடந்த தேர்தலில் மொத்தமாக 2,27,546 வாக்குகள் பெற்ற தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கூட்டணியாக இப்போது பெற்றிருப்பது 4,85,340 வாக்குகள். அதாவது, கடந்த தேர்தலை விட 2,57,794 வாக்குகள் தி.மு.க கூடுதலாகப் பெற்றுள்ளது.
அ.தி.மு.க கூட்டணி வாக்கு வங்கி கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், தி.மு.க-வுக்கான வாக்கு வங்கி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதிலிருந்து தி.மு.க பெற்றது சாதாரண வெற்றியல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இதை அறியாதவர்களே, தி.மு.க-வின் வேலூர் வெற்றியை எளிதாக எடைபோடுகிறார்கள்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!