DMK
உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் : தி.மு.க முடிவு!
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் ஐந்தாவது நாளான இன்று மின்சாரம், மதுவிலக்கு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும், கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதிலளிக்கும் கேள்வி நேரம் நிகழும்.
அதற்குப் பிறகு, கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
இன்று பிற்பகலில் மின்சாரம், மது விலக்கு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் இத்துறைகளின் முக்கிய பிரச்னைகள் குறித்து தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
”திறமையாளர்களை அடையாளம் காட்டும் முதலமைச்சர் கோப்பை” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
வரலாற்றைத் திரித்து பேசும் ராம்நாத் கோவிந்த் : காந்தியார் பேசியது என்ன?
-
‘‘இதுதான் RSS, பாஜக ஆட்சி” - முஸ்லிம்களுக்கு மகப்பேறு பார்க்க மறுத்த உ.பி. அரசுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
தொழில்முனைவோர்களின் உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்க e-marketplace... தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டில் எப்போதும் இல்லாத வகையில் நெல் சாகுபடி” -அமைச்சர் MRK பன்னீர்செல்வம் விவரங்களுடன் அறிக்கை!