DMK
குடிநீர் கேட்டு கனிமொழி எம்.பி தலைமையில் சென்னை துறைமுகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு தலைத்தூக்கியுள்ள நிலையில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரோ தண்ணீர் வறட்சி ஏதும் இல்லை, எல்லாம் வதந்திதான் என பேசியிருந்தார். ஆனால் மக்களோ தினந்தோறும் தண்ணீருக்காக அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்காத எடப்பாடியின் அ.தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை துறைமுகப் பகுதியில் தி.மு.க நாடாளுமன்றக் குழு துணைத்தலைவர் கனிமொழி தலைமையில் தி.மு.கவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அ.தி.மு.க அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களும் எழுப்பப்பட்டது.
குடிநீர் வாரியத்தை முற்றுகையிட்டும் தி.மு.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டத்தில் மத்திய சென்னை மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் கலந்துகொண்டார்.
Also Read
-
135 கிலோ போதைப் பொருள் : அன்று தவெக அமைச்சரை விஜய் காப்பற்றியதன் விளைவு, இன்று.. - கனிமொழி MP தாக்கு!
-
மேலும் கூடுதல் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி வலியுறுத்தல்!
-
“இணையத்தை குழந்தைகள் பயன்படுத்துவது அடிப்படை உரிமை” : உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
கானா பாடலின் முகவரி.. பட்டி தொட்டி எங்கும் ஒலித்த தேவா ஹிட்ஸ்.. காற்றில் கலந்தார் ‘தேனிசைத் தென்றல்’!
-
“வெள்ளை மனம் கொண்ட தேவா.. கானா என்றாலே தேவா தான்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்!