DMK
தண்ணீர் தட்டுப்பாடு: தி.மு.கவின் நோட்டிஸ் மீது மக்களவையில் இன்று விவாதம்?
தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என கடந்த வெள்ளியன்று தி.மு.க. சார்பில் மக்களவையில் நோட்டிஸ் வழங்கப்பட்டது.
மக்களின் அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டில் உள்ளதால் அவசர சூழல் கருதி, விரைவில் இதன் மீதான விவாதம் மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டது. இதனையடுத்து, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு ஒத்திவைப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், விடுமுறையை அடுத்து இன்று கூடவுள்ள மக்களவையில் இன்று விவாதம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்போது, மத்திய அரசின் குடிநீர் பிரச்னையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!