DMK
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் - கலாநிதி வீராசாமி
சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற தனியார் உணவக திறப்பு விழாவில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி திரைப்பட நடிகர் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் கலாநிதி வீராசாமி எம்.பி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், காசிமேட்டிலிருந்து 4ம் தேதி மீன்பிடிக்கசென்ற 7 மீனவர்கள் எங்க போனார்கள் என்று தெரியவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம். மீண்டும் நாளை அவரை சந்திக்கும் போது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை கேட்டறிவோம்.
காவேரித் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் பேசியுள்ளோம். நிச்சயமாக தொடர்ந்து தண்ணீர் பிரச்னையை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம். இந்த அரசை நம்பினால் நிச்சயம் தண்ணீர் பிரச்னை தீரப் போவவதில்லை. தீர்வு காணாமல் யாகம் நடத்தி கொண்டிருக்கும் அரசாக இது இருக்கிறது.
தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. ஏற்கெனவே பற்றாக்குறை இருக்கும் மாவட்டங்களில் இருந்து தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் மாவட்டங்களுக்கு தண்ணீர் வழங்குவதில் அர்த்தமே இல்லை. சில மாவட்டங்களில் தண்ணீர் மிகையாக உள்ளது. அங்கிருந்து எடுப்பதில் ஆட்சேபம் இல்லை என கூறினார்.
Also Read
-
”தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்தின் உரிமங்கள் முழுமையாக ரத்து” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!
-
“‘சுயமரியாதை’ என்ற சொல்லே அனைவருக்கும் வேண்டிய சொல்! வெல்லும் சொல்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!