DMK
முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாள் : மாவட்டச் செயலாளர்கள் வேண்டுகோள்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 96-வது பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஆகியோர் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்கள்.
இந்நிலையில், மாவட்டக் கழகத் தோழர்களுக்கு சென்னை மேற்கு - சென்னை தெற்கு - சென்னை கிழக்கு - சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“தம்பியாக, தகைமைசால் தலைவராக, எழுத்தாளராக, கவிஞராக, சொற்பொழிவாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, இலக்கியவாதியாக, திரைப்படத் தயாரிப்பாளராக, தலைசிறந்த நிர்வாகியாக, தமிழகத்தின் முதலமைச்சராக, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவராய் விளங்கியவரும், திராவிட இயக்கத்தின் போர்வாட்களில் ஒருவராகத் தமது பொதுவாழ்வைத் தொடங்கி, பின்னர், காஞ்சி தந்த காவியத் தலைவர் அறிஞர் அண்ணா அவர்களோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து பணியாற்றி, அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் பொறுப்பு வகித்து, அகில இந்திய அரசியலில் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்து, தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட தலைவர் கலைஞர் அவர்களது 96-வது பிறந்த நாள் அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள தலைவர் கலைஞர் அவர்கள் திருவுருவச் சிலைக்கு 3.6.2019 அன்று காலை 7.00 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் முன்னிலையில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
அதுபோது கழக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கழக, பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, மகளிர் தொண்டர் அணி, கலை,இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நலஉரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அனைத்து அணியினரும் மற்றும் கழகத் தோழர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.”
Also Read
-
நீதித்துறையில் ஊழல் : NCERT 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் வெடித்த சர்ச்சை!
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ புதிய உயரங்களை அடைவதில் பெருமிதம் கொள்வோம்!: முதலமைச்சர் நெகிழ்ச்சிப் பதிவு!
-
“மனிதநேயமிக்கவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : நடிகர் விஜய் ஆண்டனி புகழாரம்!
-
”இது நம்ம ஆட்டம் 2026”- மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கிய துணை முலமைச்சர் உதயநிதி
-
உலகளவில் முதன்முறையாக.. மெட்ரோ சுரங்கப்பாதைக்கு மேல் கட்டப்பட்டு மேம்பாலம்! - அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!