DMK
நடிகர் ஜே.கே.ரித்திஷ் மறைவு : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நடிகர் ஜே.கே.ரித்திஷ் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
” ராமநாதபுரம் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், எனது நண்பருமான திரு ஜே.கே.ரித்திஷ் இளம் வயதில் திடீரென்று மறைவெய்தினார் என்ற துயரச்செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களிடமும், என்னிடமும் அளப்பரிய அன்பு காட்டிய திரு ஜே.கே. ரித்திஷ் அவர்கள் கழகத்தில் இருந்தபோது நாடாளுமன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றியவர். ராமநாதபுரம் தொகுதி மக்களின் பிரச்னைகளை ஆணித்தரமாக நாடாளுமன்றத்தில் வாதிட்டவர்.
நாளடைவில் வேறு இயக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டாலும், தனது பழைய நட்பை மறந்து விடாமல் தொடர்ந்து பாசத்துடன் பழகியவர். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். “ என்று இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
Also Read
-
பா.ஜ.க-வின் கொட்டத்தை அடக்கிய பஞ்சாப் : சண்டிகர் திட்டத்தில் இருந்து பின் வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!