Cinema

”கலைமாமணி விருது என்னுடையது மட்டுமல்ல நம்முடையது” : இசையமைப்பாளர் அனிருத் நன்றி!

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு 3 ஆண்டுக்கு 90 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது திரைப்பட இசையமைப்பாளர் அனிருத்-க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு இசையமைப்பாளர் அனிருத் நன்றி தெரிவித்துள்ளார். அதில், மதிப்புமிக்க கலைமாமணி விருது எனக்கு அறிவிக்கப்பட்டதை மிகுந்த தாழ்மையுடனும் பெருமையுடனும் ஏற்றுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இயல் இசை நாடக சங்கத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், எனது முழு இசை குழுவினர், அதைவிட முக்கியமாக எப்போதும் அன்பும் ஆதரவுமளித்து வரும் எனது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. இந்த விருது என்னுடையது மட்டுமல்ல, நம்முடையது” என தெரிவித்துள்ளார்.

Also Read: ஒரு நல்ல அரசு என்ன செய்யும்... : “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” நிகழ்ச்சியை கண்டு நெகிழ்ந்த ஜேம்ஸ் வசந்தன்!