Cinema
கங்குவா படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்புவது ஏன் ? - நடிகை ஜோதிகா கேள்வி !
நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் சுமார் 10 மொழிகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. மிகப்பெரிய பட்ஜெட்டில் 3D-ல் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் 3 நாட்களில் ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த திரைப்படம் வெளியாகும் முன்னரே இந்த திரைப்படத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன.
மேலும் படத்தில் அதிக அளவு இரைச்சல் உள்ளது என விமர்சிக்கபட்ட நிலையில், அதனை சரி செய்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் , கங்குவா படத்தை சிலர் திட்டமிட்டு விமர்சிக்கின்றனர் என நடிகர் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா கூறியுள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “கங்குவா படத்தில் முதல் அரை மணி நேரம் மட்டுமே சத்தம் இரைச்சலாக உள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறோம். குறை இல்லாத படத்தை எடுக்க முடியாது. ஆனால், ஒட்டுமொத்தமாக படத்தையும் விமர்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?
ஊடங்கள் மற்றும் சிலரின் எதிர்மறையான விமர்சனங்கள் ஆச்சியமாக இருக்கிறது. சில பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை பின்தொடர்வது, இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றிற்கு வராத விமர்சனங்கள், கங்குவாவுக்கு மட்டும் ஏன்? முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனம் வர ஆரம்பித்து விட்டது. இதனை பல குழுக்கள் திட்டமிட்டு செய்கிறது” என்று கூறியுள்ளார்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!