Cinema
”இந்தி தெரியாது போயா” : இணையத்தில் வைரலாகி வரும் ரகு தாத்தா படத்தின் டீசர்!
சினிமா குடும்பத்திலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவருக்கு மலையாளத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' படம்தான் அடையாளத்தைக் கொடுத்தது.
பிறகு மலையாளத்தில் நடித்து வந்த இவருக்குப் பெரிய வெளிச்சத்தைக் கொடுத்த படம் ரஜினிமுருகன். இந்த படத்தின் வெற்றியை அடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய நாயகியாக உருவெடுத்துள்ளார். மேலும் இப்படம் இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து 'ரெமோ', 'மகாநதி', 'சர்கார்', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட படங்கள் அவரது நடிப்பிற்குப் பெயர் எடுத்துக் கொடுத்தது. அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'மாமன்னன்' படத்தில் இவரது கதாபாத்திரம் எல்லோராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மையான வேடத்தில் நடித்துள்ள ரகு தாத்தா படத்தின் டீசர் இன்று வெளியானது. இதில் 'இந்தி தெரியாது போயா' என கீர்த்தி சுரேஷ் பேசும் வசனம் ஒன்று வருகிறது.
இதையடுத்து இந்த வசனத்தைக் குறித்து பலரும் ரகு தாத்தா டீசரை வைரலாக்கி வருகிறார்கள். மேலும் இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசை விமர்சிக்கும் வகையில் படத்தின் வசனம் இடம் பெற்றுள்ளதற்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”