Cinema
விடுதலை 2 எப்போது வெளியாகும்? : இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன ஆச்சரிய காரணங்கள்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவரது படம் வெளிவந்தாலே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 2007ம் ஆண்டு இவரது இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பொல்லாதவன் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனது முதல் படத்திலிருந்தே தமிழ் சினிமாவில் தனக்காக ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். இதையடுத்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் படங்கள் வெளிவந்தது. இவர் எந்த படம் எடுத்தாலும் ஒரு புத்தகத்தை தழுவித்தான் படம் எடுப்பார்.
அப்படிதான் நடிகர் நடிகர் சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கினார். இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை மையமாகக் கொண்டது. விடுதலை முதல் பாகம் இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையில் உருவான இந்த படத்தில், பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் சூரி தனது வேற லெவல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வெற்றியின் மூலமே சூரி இனி காமெடி வேடங்களில் நடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழும் அளவிற்கு அவரது நடிப்பு ரசிக்கும் படி இருந்தது.
இதையடுத்து விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் இதற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விடுதலை 2 தாமதத்திற்கு காரணம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் மனம் திறந்து கூறியுள்ளார்.
இது குறித்துக் கூறிய வெற்றிமாறன், "பனி பொழிவில் படத்தின் இறுதி காட்சிகளை எடுக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனால் அது முடியவில்லை. நான் நினைக்கும் காட்சியை எடுக்க முயன்றால் இன்றும் நான்கு ஆண்டுகள் ஆனாலும் எடுக்க முடியாது. அதன் பிறகுதான் செயற்கை பனிபொழிவை உருவாக்கி இறுதி காட்சியை எடுத்துள்ளோம். இதன் காரணமாகத்தான் விடுதலை 2 படப்பிடிப்பு தாமதமானது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
உங்களிடம் நான் எதிர்பார்க்கும் பிறந்தநாள் பரிசு இதுதான் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
பா.ஜ.க-வின் கொட்டத்தை அடக்கிய பஞ்சாப் : சண்டிகர் திட்டத்தில் இருந்து பின் வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !