சினிமா

சுவாரசியம் இல்லை - முட்டாள்களுக்கு முட்டை சாப்பிடும்போது கூட வன்மம் : போட்டியாளர்களை வருத்தெடுத்த கமல்!

'ஒரு டாஸ்கையாவது சுவாரசியமா செய்றீங்களானா இல்ல, வன்மத்துல இருந்து விடுபட மாட்டிக்கிறீங்க' என போட்டியாளர்களை கமல் கண்டித்துள்ளது போட்டியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவாரசியம் இல்லை - முட்டாள்களுக்கு முட்டை சாப்பிடும்போது கூட வன்மம் : போட்டியாளர்களை வருத்தெடுத்த கமல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தொடங்கி 70 நாட்களை எட்டி விட்டது. இந்த நிகழ்ச்சியின் wild card போட்டியாளர்களாக 5 பேர் வந்ததை தொடர்ந்து வெளியேறியே பழைய போட்டியாளர்கள் இருவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் விஷ்ணு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும், விஜய், அனன்யா, பூர்ணிமா,நிக்சன்,விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். வீட்டில் இந்த வாரம், பொம்மை டாஸ் முடிந்து, கல்லூரி டாஸ்கை ஆரம்பித்தார் பிக்பாஸ். இதில், principalஆக தினேஷும், மாரல் சயின்ஸ் டீச்சராக அர்ச்சனாவும், கணக்கு டீச்சராக மாயாவும், கெமிஸ்ட்ரி டீச்சராக விஷ்ணுவும், பி.டி. மாஸ்டராக நிக்சனும் நியமிக்கப்பட்டனர்.

இந்த டாஸ்க் தொடங்கியதும் கணக்கு டீச்சர் மாயா கலாச்சாரம் ரொம்ப முக்கியம், ஸ்லீவ்லெஸ் நம்ம கலாச்சாரம் இல்லை என அர்ச்சனாவை வம்புக்கு இழுத்தார். அப்போது நீங்கள் அணிந்திருக்கும் சுடிதாரும் நமது கலாச்சாரம் இல்லை என்னை போல புடவையில் வாங்க என மாயாவுக்கு பதிலடி கொடுத்தார் அர்ச்சனா. கல்லூரி டாஸ்கிங் முதல் வகுப்பு தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் எந்த formula workout ஆகும் என கணக்கு வகுப்பெடுத்தார் மாயா. இவரை தொடர்ந்து வந்த அர்ச்சனா, பிக் பாஸ் வீட்டில் எதையெல்லாம் செய்ய வேண்டும், எதையெல்லாம் செய்யக்கூடாது என வகுப்பெடுக்க, இதயடுத்து வந்த நிக்சன், எந்த டாஸ்க்லயும் வேகம், நிலை, விவேகம், நிதானம் ஆகிய நாலு விஷயத்தை follow பண்ணனும் என தனது வகுப்பை தொடங்கினர். அத்துடன் கேம் வேற,பழக்க வழக்கம் வேற அர்ச்சனா மாதிரி சின்ன டாஸ்க்கிற்கு கூட டென்ஷன் ஆக கூடாது என அர்ச்சனாவை டார்கெட் செய்து பேசினார்.

சுவாரசியம் இல்லை - முட்டாள்களுக்கு முட்டை சாப்பிடும்போது கூட வன்மம் : போட்டியாளர்களை வருத்தெடுத்த கமல்!

இந்த டாஸ்கின் முடிவில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த மாணவரான ரவீனாவுக்கும், சிறந்த ஆசிரியரான நிக்சனுக்கும் கோல்ட் ஸ்டார் வழங்கப்பட்டது. தொடர்ந்து யார் மனதையும் புண்படுத்தி பேசவில்லை என இறுதி விளக்கம் அளித்த நிக்சன், வீட்டில் ஒன்றும், விசாரணை நாளில் ஒன்றுமாக அர்ச்சனா மாற்றி மாற்றி பேசியதை சுற்றிக்காட்டி இருந்தார். இந்த விவகாரம் பிக்பாஸ் வீட்டில் பூகம்பமாக வெடிக்க தொடங்கியது. அர்ச்சனா மற்றும் நிக்ஸனிடையே வாக்குவாதமும் ஏற்பட்டது. இதையடுத்து, பாத்திரம் கழுவும் பிரச்னையை நிக்சனுடன் மும்முரமாக உரையாடிக் கொண்டிருந்தார் விஷ்ணு. இது திடீரென புகைய தொடங்கியவுடன் வினுஷா பிரச்னையை இழுத்து வந்து நிக்சனிடம் சண்டையிட தொடங்கினார் விஷ்ணு. இதனால் கோவப்பட்ட நிக்சன் 'நா செஞ்சது தப்புதான், அதுக்காக ஆயிரம் தடவ மன்னிப்பு கேட்டுடன், வெளியே போய் அவங்க கால்ல கூட விழறேன்னும் சொல்லிட்டேன். அதையே குத்தி காமிகாதிங்க' என கொந்தளித்தார்.

அவ்வளவு நேரம் உப்மா சாப்பிட்டுக்கொண்டிருந்த அர்ச்சனா தனது பங்கிற்கு நிக்சனிடம் சண்டையிட தொடங்கினார். அத்துடன் 'ஐஷு வெளிய போனதுக்கு நீதான் காரணம்' என நிக்சனை கூறியதால் கடுப்பான நிக்சன், அர்ச்சனாவை ஒருமையில் பேச தொடங்கினார். இந்த கோவத்தின் வெளிப்பாடாக நாயே, போடி, சொருகிடுவான் போன்ற வார்த்தைகளை நிக்சன் உபயோகித்தது வீட்டில் இருந்த நபர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் இதனால் கடுமையான கோபம் அடைந்த அர்ச்சனா வார இறுதியில் உரிமை குரல் உயர்த்த வேண்டும் என முடிவு செய்தார்.

சுவாரசியம் இல்லை - முட்டாள்களுக்கு முட்டை சாப்பிடும்போது கூட வன்மம் : போட்டியாளர்களை வருத்தெடுத்த கமல்!

இந்த பிரச்னையெல்லாம் சற்று தனியவே, கிச்சனில் சமையலுக்காக சைக்கிள் ஓடிக்கொண்டிருந்த நபர்களை மாற்றும் நேரம் வந்தது. இதில், விக்ரம் மற்றும் அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, 'ஜாக்பாட்' என்னும் டாஸ்கை ஆரம்பித்தார் பிக்பாஸ். இது கோல்ட் ஸ்டார் வெல்வதற்கான இறுதி வாய்ப்பு எனவும், போட்டியாளர்கள் தங்களது விவாதத்தின் மூலம் மற்ற போட்டியாளர்கள் வெளியேற்ற வேண்டும், அவ்வாறு இறுதியில் வெற்றி பெரும் நபருக்கு ஐந்து ஸ்டார்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கின் இறுதியில் விக்ரம் மற்றும் விஜய் விவாதிக்க விக்ரம் வெற்றி பெற்று கோல்ட் ஸ்டார்களை பெற்றுக்கொண்டார்.

நிக்ஜாம் புயல் காரணமாக இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் எவிக்ஷன் இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தார். வார இறுதி நாளான நேற்று கமல் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்தார். வந்த உடனேயே இந்த வாரத்தில் நடைபெற்ற பிரச்சினை குறித்து பேச தொடங்கிய கமல், உரிமை குரல் உயர்த்திய அர்ச்சனாவிடம், நீங்கள் ஏன் உரிமை குரல் உயர்த்தியுள்ளிகளோ அதுவும் எனது எண்ணமும் ஒன்றாகத்தான் இருக்கும் என கூறினார். தொடர்ந்து, நிக்சனிடம் நேரடியாக கேள்வி கேட்ட கமல், 'சொருகிடுவேன்னு சொன்னிங்களே எங்க?' என கேள்வி எழுப்பினார். இதனால் பதறிப்போன நிக்சன் 'கோபத்துல சொல்லிட்டேன்' என கூற, நிக்சனுக்கு yellow strike card கமலால் காட்டப்பட்டது. மேலும், இப்படியெல்லாம் பேசினால் card கலர் மாறும் என நிக்சனை எச்சரித்த கமல், 'வெச்சு செஞ்சுடுவேன், அடிச்சு காலி பண்ணிடுவேன், ஆட்டிக்கிட்டே வராங்க' போன்ற வார்த்தைகள் எல்லாம் இந்த வீட்டில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என போட்டியாளர்கள் அனைவரிடமும் கடிந்து கொண்டார்.

சுவாரசியம் இல்லை - முட்டாள்களுக்கு முட்டை சாப்பிடும்போது கூட வன்மம் : போட்டியாளர்களை வருத்தெடுத்த கமல்!

'நிக்சனாேட True Colour வெளியே வந்துடுச்சுன்னு சொன்னீங்களே, அதுக்கான அர்த்தம் என்ன?' என மணியிடம் விசாரணை நடத்தினார் கமல். நிக்சன் கோபத்தில் பேசிய வார்த்தைகளையே தான் சுட்டிக்காட்டியதாக மணி அதற்கு விளக்கமளித்தார். அடுத்ததாக 'தௌலத்' என்ற வார்த்தையை உபயோகித்த தினேஷிடம் தனது விசாரணையை தொடங்கிய கமல் பூசி முழுகாம சொல்லுங்க நார்த் மெட்ராஸ்ல அப்படி பேசுவாங்கனு சொல்லுறிங்களா.. பிராண்டிங் பண்ணாதீங்க என எச்சரித்தார். இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நிக்சன், இனிமேல் எங்கயும் இந்த மாதிரி பேச மாட்டேன் என கமலிடம் கூறியதுடன், வினுஷாவை உருவ கேலி செய்ததற்கு மன்னிப்பு கேட்டு கொண்டார்.

இந்த வரிசையில் முக்கிய நபரான அர்ச்சனாவிடம், ;வினுஷா விஷயம் திடீரென ஏன் இங்க வந்தது; என தனது கேள்விகளை கேட்க தொடங்கினார் கமல்.மேலும், 'ஐஷூவோட விஷயத்தையும் இப்போ இழுக்காதீங்க அவுங்க இங்க இல்ல' என அர்ச்சனாவுக்கு அறிவுரை கூறினார். மேலும், இந்த வாரம் விசித்ரா இருக்க மாட்டாங்க, எலிமினேட் ஆயிடுவாங்கன்னு நீங்க எப்படி சொன்னிங்க என விஷ்ணுவிடமும் கேள்வி எழுப்பிய கமல், 'விசித்ரா சேவ்' என அறிவித்து விடைபெற்றார்.

சுவாரசியம் இல்லை - முட்டாள்களுக்கு முட்டை சாப்பிடும்போது கூட வன்மம் : போட்டியாளர்களை வருத்தெடுத்த கமல்!

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் இன்றைய நிகழ்ச்சியில் 'இந்த வீட்ல entertainment இருக்கா? ஒரு டாஸ்கையாவது நீங்க சுவாரசியமா செய்றீங்களானு பாத்தா அதுவும் இல்ல, எந்த ஆசையில நீங்க வந்திங்க அப்படிங்கறதே மாறி போய்டுச்சு, வன்மத்துல இருந்து விடுபட மாட்டிக்கிறீங்க. ஒருத்தர ஒருத்தர் நீங்களே மதிக்கிறது இல்ல மக்கள் ஏன் உங்கள மதிச்சு பாக்கணும், முட்டாள்கள் முட்டை சாப்பிடும்போது கூட வன்மத்தை கக்கும் நேரத்தில் Entertainment எப்படி வரும்?' என போட்டியாளர்களை கமல் வருத்தெடுக்கும் காட்சிகள் ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. அத்துடன் போட்டிக்கு தடையான நபர் யார் என கமல் கேட்கும் கேள்விக்கு அர்ச்சனா மற்றும் தினேஷை சக போட்டியாளர்கள் சுட்டி காட்டுவதையும் காணமுடிகிறது.

போராடி பெற்ற தனது கேப்டனகியை தவறாக பயன்படுத்தினாரா விஷ்ணு. கேப்டன் கேப்டனேசில இல்ல பொறுப்பில்லாதவங்கள shopping அனுப்பறத்தப்பத்தி பேசுறீங்களே நியாயமா நீங்க போயிருக்கும் விஷ்ணு என கமல் கண்டிப்பதையும் ப்ரோமோவில் காண முடிகிறது. இதனால் வீட்டில் இரண்டு டீம் உருவாகி இருப்பதை கமல் போட்டியாளர்களிடம் சுட்டி காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories