சினிமா

இவங்க வந்ததும் Fun செத்துருச்சு : பாசம் பறிபோயிருச்சு : Wild card போட்டியாளர்களை Target செய்த நிக்சன்!

'பாசமா இருந்த பிக்பாஸ் வீடு, wild card வந்த அப்புறம் மாறிடுச்சு' என நிக்சன் பேசியுள்ளது பிக்பாஸ் போட்டியாளர்களிடையே பிரச்னையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இவங்க வந்ததும் Fun செத்துருச்சு : பாசம் பறிபோயிருச்சு : Wild card போட்டியாளர்களை Target செய்த நிக்சன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசன் தொடங்கி 65 நாட்களை கடந்து விட்டது. இந்த முறை பிக்பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் பிரிக்கப்பட்டு நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வார இறுதியில் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்கில் விஷ்ணு வெற்றி பெற்று இந்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். போன வாரமே கேப்டனுக்கு செக் வைக்கும் விதமாக வீட்டிற்குள் மணி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இதில் இன்னும் சுவாரசியத்தை கூட்டும் முயற்சியாக விதிமீறல் நிகழ்வதில் கேப்டன் அலட்சியம் காட்டினாலோ, ஒருதலைப்பட்சமாக செயல்பட்டாலோ அல்லது வீட்டில் Entertainment குறைந்தாலோ கேப்பிட்டனுக்கு எதிராக போட்டியாளர்கள் மணி அடிக்கலாம் என பிக்பாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கேப்டன் தரும் விளக்கம் தொடர்ந்து மூன்று முறை போட்டியாளர்களால் ஏற்கப்படவில்லை என்றால் அவரது பதவி பறிபோவதுடன் நாமினேஷனிலும் நேரடியாக இடம்பெறுவார்.

இவங்க வந்ததும் Fun செத்துருச்சு : பாசம் பறிபோயிருச்சு : Wild card போட்டியாளர்களை Target செய்த நிக்சன்!

இதனை தொடர்ந்து போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்புவதற்கான நேரம் வந்தது. இதில் விஜய், அனன்யா, பூர்ணிமா,நிக்சன்,விக்ரம் மற்றும் ரவீனா ஆகியோர் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விதிமீறல் செய்தே ஒவ்வொரு முறையும் கேஸ் அணைக்கப்படுவது பிக்பாஸுக்கே bore அடித்துவிட்டது போல, அதனால் கிச்சன் ஏரியாவில் புதிதாக ஒரு சைக்கிள் வைக்கப்பட்டிருந்தது. சமையல் செய்ய கேஸ் வேண்டும் என்றால் தொடர்ந்து ஒருவர் சைக்கிள் மிதிக்க வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தார். இதற்காக முதலில் தினேஷ் மற்றும் கூல் சுரேஷ் தேர்வு செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இதில் போன வார கேப்டனாக இருந்த நிக்சனை பிக்பாஸ் வீட்டார் அனைவருமே டார்கெட் செய்தனர். இதனால் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து நிக்சன் மட்டுமே நாமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டார். மேலும், பிக்பாஸ் வீட்டில் தினேஷ், மணி, விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இவங்க வந்ததும் Fun செத்துருச்சு : பாசம் பறிபோயிருச்சு : Wild card போட்டியாளர்களை Target செய்த நிக்சன்!

அடுத்ததாக வீட்டுப்பணி டாஸ்க் நடைபெற்றது. இதில் ஸ்மால் பாஸ் வீட்டாருக்கு வெற்றி. கேஸ்காக தொடர்ந்து சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த தினேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர்கள் ஒருவரை swap செய்துகொள்ளலாம் என பிக்பாஸ் அறிவிக்க இதில் அடுத்த போட்டியாளராக ரவீனா தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்றைய நிகழ்ச்சியில் மார்னிங் அக்டிவிட்டி ஒன்று வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒருவரை தேர்வு செய்து அவர்களிடம் இருக்கும் குழந்தைத்தனத்தை பற்றி சொல்ல வேண்டும். இதில், அர்ச்சனாவைத் தேர்ந்தெடுத்த நிக்சன் "சின்ன பிரச்னைக்குக்கூட விடாம மல்லுக்கட்டுவாங்க" என்றார். இதையடுத்து பூர்ணிமாவை தேர்ந்தெடுத்த அர்ச்சனா, "வளர்ந்த குழந்தை" என்று கூறினார். அடுத்ததாக, ரவீனாவை தேர்ந்தெடுத்த விசித்ரா "Maturedஆ இருகுறா மாதிரி தெரியுது ஆனா பல இடங்கள்ல குழந்தை மாதிரி நடந்துக்குறாங்க" என்றார். மேலும் அனன்யா அர்ச்சனனை தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து "அராத்து கிட்" என நிக்சனை தினேஷ் கூறினார். இதில் இறுதியாக மணியை தேர்ந்தெடுத்த விக்ரம் "எல்லாத்தையும் குழந்தை மாடுலேஷன்ல சொல்லுவாங்க" என்று கூறினார்.

இவங்க வந்ததும் Fun செத்துருச்சு : பாசம் பறிபோயிருச்சு : Wild card போட்டியாளர்களை Target செய்த நிக்சன்!

அடுத்ததாக பொம்மலாட்டம் டாஸ்கை ஆரம்பித்தார் பிக்பாஸ், இந்த டாஸ்கிற்காக வீடு kid zone ஆக மாறியது. இதில் குழந்தைகள், பேசும் பொம்மைகள் மற்றும் பொறுப்பாளர்கள் என வீடு மூன்று அணியாக பிரிந்தது. குழந்தைகளாக தினேஷ், பூர்ணிமா, சுரேஷ், மாயா, ரவீனா மற்றும் விக்ரம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பொம்மைகளாக அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு, விசித்ரா மற்றும் விஜய் ஆகியோரும், மணி மற்றும் அனன்யா பொறுப்பாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரோபோ பொம்மையாக வந்த விஜய்யை மாயா தேர்ந்தெடுத்தார். Secret Sharing பொம்மையாக வந்த விசித்திராவை கூல் சுரேஷும், speed analysis பொம்மையாக வந்த விஷ்ணுவை விக்ரமும், திடீர் மக்கர் பொம்மையாக வந்த நிக்சனை ரவீனாவும், மேக்கப் மூஞ்சி பொம்மையாக வந்த அர்ச்சனாவை தினேஷும் தேர்வு செய்தனர்.

இதில் இறுதியாக பூர்ணிமாவுக்கு பொம்மை கிடைக்காததால், அங்கிருக்கும் அனைத்து பொம்மைகளுடனும் விளையாடலாம் என பூர்ணிமாவிடம் பொறுப்பாளர்கள் கூறினர். இந்த பொம்மைகளையெல்லாம் வைத்து ஒவ்வொருவரும் தங்கள் இஷ்டம் போல ஆட்டி படைத்தனர். ஒருவழியா இந்த பொம்மை டாஸ்க் முடிவிற்கு வந்தது. இதில் குழந்தைகள் அணி வெற்றி பெற்று மாயா கோல்ட் ஸ்டார் வென்றார். அத்துடன் இந்த டாஸ்கில் சிறந்த பங்களிப்பை வழங்கிய நபராக விஜய் தேர்வு செய்யப்பட, அவருக்கும் ஒரு கோல்ட் ஸ்டார் வழங்கப்பட்டது.

இவங்க வந்ததும் Fun செத்துருச்சு : பாசம் பறிபோயிருச்சு : Wild card போட்டியாளர்களை Target செய்த நிக்சன்!

பிக்பாஸ் நிகழ்ச்சி பாதி கிணறை தாண்டி இறுதி நாளை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. இதனால் யார் டைட்டிலை வெல்ல போகும் நபர் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் இனி வரும் ஒவ்வொரு நாளும் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கபடுகிறது. மேலும் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவில் பிக்பாஸ் வீடு கலை கல்லூரியாக மாறியுள்ளது. "கல்லூரி கலாட்டா" என்ற இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் கல்லூரி மாணவர்களாகவும், மாயா, விஷ்ணு, தினேஷ் ஆகியோர் ஆசிரியர்களாகவும் வருவதை காண முடிகிறது.

இவங்க வந்ததும் Fun செத்துருச்சு : பாசம் பறிபோயிருச்சு : Wild card போட்டியாளர்களை Target செய்த நிக்சன்!

மேலும், இந்த டாஸ்கில் வந்து பேசும் நிக்சன், "ஆரம்பத்துல இருந்த fun செத்துருச்சு. இந்த வீட்டுக்கு நீங்க வந்துருக்கறது fun பண்ண, physicalஆ ரத்தம் வர அளவுக்கு விளையாடுனாலும் housemates சந்தோசமா இருந்தாங்க. அந்த அளவு ஒரு பாசம் இருந்தது. ஆனா, பிக்பாஸ் வீட்டில 5 wild card வந்த அப்புறம் இப்போ அது இல்ல", என கூற நிக்சனை உற்சாகபடுத்தி வீட்டில் உள்ள பழைய போட்டியாளர்கள் அனைவரும் கொண்டாடுகின்றனர். இதனால் வீட்டிற்குள் wild card போட்டியாளர்களாக வந்த அர்ச்சனா, தினேஷ் ஆகியோர் நிக்சன் மற்றும் அவரின் ஆதரவு போட்டியாளர்களுடன் சண்டையிடலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

- சீ. ரம்யா.

banner

Related Stories

Related Stories