சினிமா

புதிய மணியால் பிரச்சினை வெடிக்குமா? பூர்ணிமாவை டார்கெட் செய்யும் மாயா : சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண் 'இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சியிலேயே இதுதான் கடினமானது நீங்கள் இதுவரை வந்ததே பெரிய விஷயம்' என போட்டியாளர்களை ஊக்குவித்தார்.

புதிய மணியால் பிரச்சினை வெடிக்குமா? பூர்ணிமாவை டார்கெட் செய்யும் மாயா : சூடு பிடிக்கும் பிக்பாஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் தொடங்கி 55 நாட்களை கடந்து விட்டது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து எவிக்சன் நடத்தப்பட்டு மேலும் 5 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாக போட்டியாளர் தினேஷ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டிருந்தார். 'பாதிக் கிணறு தாண்டிட்டிங்க, ஸ்ட்ராட்டஜி பத்தி யோசிக்காம கேம விளையாடுங்க' என போட்டியாளர்களுக்கு கமல் அறிவுரை கூறி இருந்தார். இதனால் போட்டி விறுவிறுப்பாக இருக்குமா என்று ரசிகர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றார்போல பிக்பாஸும் பூகம்பம் டாஸ்க் கொடுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக போன வாரம் விக்ரம், பூர்ணிமா,விஷ்ணு, விசித்ரா, ஜோவிகா, பிராவோ ஆகியோர் கேப்டனால் தேர்வு செய்யப்பட்டு ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அதிக ஸ்டார் வைத்திருந்த நபரான விஷ்ணு, மாயா மற்றும் அக்ஷயாவை நேரடியாக நாமினேட் செய்திருந்தார். இதனால் மணி, அர்ச்சனா, ரவீனா, விசித்ரா, பிராவோ, பூர்ணிமா, மாயா மற்றும் அக்ஷயா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். அக்ஷயாவும், விக்ரமும் வீட்டில் சும்மாவே இருப்பதை உணர்ந்த பிக்பாஸ் இவர்களை வைத்து Content கொடுக்க நினைத்தாரோ என்னவோ, இருவரையும் ஷாப்பிங் செய்ய அனுப்பிவைத்தார். இந்த வீட்டை மூன்று பூகம்பங்கள் தாக்கவிருப்பதாகவும், அதன் மூலம் வெளியே அனுப்பப்பட்ட முன்னாள் போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வருவார்கள் எனவும் பிக்பாஸ் ஒரு பூகம்பத்தை கிளப்பினார்.

புதிய மணியால் பிரச்சினை வெடிக்குமா? பூர்ணிமாவை டார்கெட் செய்யும் மாயா : சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

இதையடுத்து, போட்டியாளர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு பூகம்ப தருணத்தை பகிர்ந்து கொள்ளும் டாஸ்க். இதில், முதலில் வந்த தினேஷ் தனது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான தருணங்களை எடுத்துரைத்தார். அடுத்ததாக வந்த விசித்ரா சினிமா படப்பிடிப்பில் தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து பேசி இருந்தார். மேலும் அப்போது தனக்கு அங்கு உதவிய நபரே வருங்கால கணவரானார் என்றும், அந்த சம்பவத்தால் திரைத்துறையை விட்டு அவர் விலகியதாகவும் கூறி இருந்தார். விசித்ராவை தொடர்ந்து வந்த மாயா, தான் ஒரு முறை தற்கொலை செய்யவே முடிவெடுத்து விட்டதாகவும், பின்னர் தனது வாழ்க்கை திரும்பி வந்த பாதை குறித்து விவரித்தார்.

இதனிடையே ஷாப்பிங் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். இதில் தோற்றால் சர்க்கரை மற்றும் உப்பு தொடர்பான உணவுப்பொருட்கள் அனைத்தும் வீட்டில் இருந்து அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் பிக்பாஸ் வீட்டார் தோற்றதால் சர்க்கரை மற்றும் அது சம்மந்தப்பட்ட அனைத்து பொருட்களையும் பயன்படுத்த கூடாது என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நிக்சனின் பிறந்தநாளை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டில் அவருக்கு சர்ப்ரைஸாக கேக் வெட்டப்பட்டது. அத்துடன் நிக்சனை ஒரு நாள் கேப்டனாக தினேஷ் நியமித்தார். 'உருட்டு அப்படி' என்ற ஷாப்பிங் டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். இதில் தோற்றால் அடுத்த வாரதிற்கு ஒருவரை நேரடியாக நாமினேட் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் பலரும் திட்டமிட்டே தோற்றதால், இறுதியில் தினேஷ் நாமினேட் செய்யப்பட்டார். ஆனால் தினேஷை எவிக்ட் செய்வது என் நோக்கமல்ல, அவர் அடுத்த வாரமும் கேப்டன் ஆகிவிட கூடாது என பூர்ணிமா விளக்கமும் அளித்தார்.

பிக்பாஸ் வீட்டில் 3 பூகம்பம் டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் இரண்டு டாஸ்குகளில் பிக்பாஸ் வீட்டார் தோற்றதால் யார் யார் வீட்டில் இருந்து வெளியேறுவார்கள், யாரெல்லாம் உள்ளே வருவார்கள் என்பது வார இறுதியில் தெரியும் என பிக்பாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக மீண்டும் போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் எதிர்கொண்ட பூகம்பம் பற்றிய டாஸ்க் தொடங்கியது. இதில் வந்து பேசிய ப்ராவோ அவரது வாழ்வில் எதிர்கொண்ட பாலியல் சீண்டல் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

மீடியாவிற்கு வர வேண்டும் என்ற தனது தேடலுக்கு உதவுவதாக ஒரு நபர் உறுதியளித்ததாகவும், ஆனால் ஹோட்டல் அறையில் தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்றதாகவும், எப்படியோ அங்கிருந்து தப்பி விட்டேன் ஆனால் இப்போதும் சக ஆண் கூட வர பயமா இருக்கும் என்று அவர் கூறியது பெண் பிள்ளைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதற்கு நிகராக ஆண் பிள்ளைகளையும் நாம் கவனிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.

அடுத்ததாக பேசிய மணி டான்ஸ் துறையில் சாதிக்க வேண்டும் என்ற தனது கனவு, தந்தையின் மரணம் போன்றவற்றை பேசி இருந்தார். மேலும் புகை பழக்கத்தால் தனது தந்தை உயிரிழந்ததாக கூறிய அவர், புகை பழக்கத்தை தவிர்த்துடுங்கள் என்றும் கூறி சென்றார். இந்த பூகம்பம் டாஸ்கில் தொடர்ச்சியாக பேசிய விஷ்ணு, தன்னை பெரிய ஆள் ஆக்கி பாக்க வேண்டும் என்பது தனது சித்தப்பாவின் கனவு, ஆனால் அவரது மறைவின்போது அருகில் இருக்க முடியவில்லை என்று வருந்தினார்.

புதிய மணியால் பிரச்சினை வெடிக்குமா? பூர்ணிமாவை டார்கெட் செய்யும் மாயா : சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

இதன் தொடர்ச்சியாக, விஷ்ணுவும் விக்ரமும் போட்டியாளர்களுக்கு பட்ட பெயர் வைக்க வேண்டும் என்ற டாஸ்க் வழங்கப்பட்டது. இதில், மாயாவுக்கு வைக்கோல்போர், பூர்ணிமாவுக்கு காதம்பரி, அக்ஷயாவிற்கு பருத்தி மூட்டை, சுரேஷிற்கு பதனி.. பதனி, மணி ரவீணாவுக்கு buy 1 get 1, அர்ச்சனாவுக்கு தொட்டால் சினிங்கி, விசித்ராவுக்கு தண்ணீர் லாரி, தினேஷ்க்கு இம்சை அரசன் போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன. கேப்டனுக்கான வாக்கெடுப்பில் நிக்சன், விஷ்ணு, ஜோவிகா ஆகிய மூவரும் தேர்வானார்கள். இதில் நிக்சன் வெற்றி பெற்றார்.

அடுத்ததாக போட்டியாளர்களின் வாழ்வில் ஏற்பட்ட பூகம்பம் டாஸ்க் வரிசையில் பேச வந்த பூர்ணிமா, 11 ஆண்களுடன், தான் ஒரே பெண்ணாக இருந்ததும், வேலை இல்லாமல் வீடு இல்லாமல் தான் பட்ட துன்பத்தை பற்றி கூறினார். ஒரு சின்ன டவுனில் இருந்து கிளம்பி, நம்பிக்கை குறைவா இருந்த ஒரு பொண்ணு இன்னைக்கு சென்னையில் சொந்த வீடு, சொந்த கார் என்று கூறியது பலருக்கும் நம்பிக்கை அளிக்க கூடிய ஒரு விஷயமே.

இந்த டாஸ்கின் இறுதியாக யாருடைய கதை அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியதோ அவருக்கு கோல்ட் ஸ்டார் பரிசாகக் கிடைக்கும். இதில் ப்ராவோவுக்கு கோல்ட் ஸ்டார் வழங்கப்பட்டது. வார இறுதி நாளான சனிக்கிழமை போட்டியாளர்களை சந்தித்த கமல், விசித்ராவுக்கு பிரச்னை ஏற்பட்டபொழுது அவருக்கு உறுதுணையாக இருந்து, பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்ட விசித்ராவின் கணவர் ஷாஜியை தொடர்பு கொண்டு பேசியதாக கூறினார். மேலும், இந்த பிரச்னையை நீங்கள் சொன்ன விதம் உங்களின் முதிர்ச்சியைக் காட்டுகிறது என்று விசித்ராவையும் பாராட்டினார்.

பெண் குழந்தைகள் மீது மட்டுமில்லை. ஆண் குழந்தைகளின் மீதும் பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன அதை யாரும் கேலி செய்துவிடக்கூடாது என ப்ராவோவின் கதைக்கு கமல் மக்களிடம் அறிவுரை கூறினார். பூகம்பம் டாஸ்கின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பிய கமல் ப்ராவோ வெளியேறுவதாக அறிவித்தார்.

புதிய மணியால் பிரச்சினை வெடிக்குமா? பூர்ணிமாவை டார்கெட் செய்யும் மாயா : சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

இதனை தொடர்ந்து ஞாயிறுக்கிழமை மீண்டும் போட்டியாளர்களை சந்தித்த கமல் Criticism பற்றி போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும்,“நான் எதையெல்லாம் விமர்சிக்க வேண்டும் என்று நீங்க முடிவு பண்ண முடியாது என்று போட்டியாளர்களிடம் கடிந்து கொண்டு கமல், நான் கேட்கவில்லை என்றால் உங்களால் என்னை என்ன செய்யமுடியும்?.. நான் உங்களுடன் சேர்ந்து விளையாட வரவில்லை உங்களை மேம்படுத்த வந்துள்ளேன்” என்றார். தொடர்ந்து பூகம்ப டாஸ்கின் விளைவாக ஒருவர் உள்ளே செல்ல வேண்டும் என்று கூறி விஜய் வர்மா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.

விஜய் வீட்டிற்குள் சென்றதும் இரண்டாவது எவிக்சன் நடந்தது. இதில் அக்ஷயா வீட்டில் இருந்து வெளியேறினார். அக்ஷயா வெளியேறிய பின்னர் மீண்டும் போட்டியாளர்களை சந்தித்த கமல் விதிமீறல் நிகழக்கூடாது என்று எச்சரித்து விடை பெற்றார். இதையடுத்து முதல் வாரமே வெளியேறி இருந்த அனன்யா பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றார். அனன்யா வீட்டிற்குள் இருந்த போட்டியாளர்கள் அனைவருக்கும் ஒரு பட்ட பெயர் வழங்க வேண்டும் என்று செக் வைத்தார் பிக்பாஸ்.

இதில், விசித்ராவுக்கு நரி, கூல் சுரேஷுக்கு கொசு, மாயாவுக்கு விஷ பாட்டில், நிக்சன்க்கு Cringe, ரவீனா Puppet, விக்ரமுக்கு மிக்சர், அர்ச்சனாவுக்கு சொம்பு, விஷ்ணுவுக்கு personal secretary, ஜோவிகாவுக்கு காலி பாத்திரம், பூர்ணிமாவுக்கு தவளை, மணிக்கு Boomer, தினேஷ்க்கு தேள் என்ற பெயர்கள் வழங்கப்பட்டன. ஆக மொத்தம் 50 நாட்களை கடந்து இந்த சீசனில் இரு போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இதனால் இரு முறை double eviction, இரு முறை wild card entry நடைபெற்றுள்ளது.

புதிய மணியால் பிரச்சினை வெடிக்குமா? பூர்ணிமாவை டார்கெட் செய்யும் மாயா : சூடு பிடிக்கும் பிக்பாஸ்!

இதனை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் இன்று புதிதாக மணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கேப்டன்சியில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் மணியை அடிக்கலாம் என்றும், மணி அடித்த போட்டியாளரின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு அடுத்தவார நாமினேஷனுக்கு அவர் நேரடியாக செல்வார் என்றும் பிக்பாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டுள்ளது. இதில் விக்ரம், விஜய், அனன்யா, பூர்ணிமா ஆகியோர் நாமினேஷன் இடம்பெறுவதாக ப்ரோமோவில் தெரிகிறது. இதில் மாயா பூர்ணிமாவை நாமினேட் செய்யும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. மேலும், அடுத்த ட்விஸ்டாக பிக்பாஸ் வீட்டிற்கு ஹரிஷ் கல்யாண் வந்துள்ளார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும் ஆடல், பாடல் என குஷியாக காணப்படுகின்றனர். 'இதுவரை நடைபெற்ற நிகழ்ச்சியிலேயே இதுதான் கடினமானது நீங்கள் இதுவரை வந்ததே பெரிய விஷயம்' என ஹரிஷ் கல்யாண் போட்டியாளர்களை ஊக்குவிக்கிறார். அத்துடன் ஒரு நாள் அவர்களுடன் செலவிடலாம் என்று பிக்பாஸிடம் ஹரிஷ் கல்யாண் கேட்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண் தான் நடித்துள்ள பார்க்கிங் பட புரோமோஷனுக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- சீ. ரம்யா.

banner

Related Stories

Related Stories