சினிமா

அரை சதம் அடிக்கப்போகும் பிக்பாஸ் வீடு.. விதி மீறல்களில் ஈடுபடும் போட்டியாளர்கள்.. தட்டிக் கேட்பாரா கமல்?

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்ட நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கமல் கண்டிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அரை சதம் அடிக்கப்போகும் பிக்பாஸ் வீடு.. விதி மீறல்களில் ஈடுபடும் போட்டியாளர்கள்.. தட்டிக் கேட்பாரா கமல்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் தொடங்கி 49 நாட்களை எட்டிவிட்டது. பிக்பாஸ் வீட்டில் போன வாரம் நடைபெற்ற எவிக்சன் பிராசஸில் ஐஷு வெளியேறினார். பிக்பாஸ் வீட்டிற்குள் மிக்ஸர் பார்ட்டிகள் அதிகம் உள்ள பொழுது ஏன் ஐஷூ வெளியேறினார் என்ற விவாதம் வீட்டில் தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த வாரம் தீபாவளி பண்டிகை வந்ததால் வீட்டில் ஸ்பெஷல் டாஸ்க்குகளும் களைகட்டியது. வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக நடிகர் புகழ் மற்றும் நடிகை சிருஷ்டி டாங்கே ஆகியோர் வந்து சென்றனர்.

பிக்பாஸ் வீட்டில் போன வாரத்திற்காக நடைபெற்ற கேட்பன்சி டாஸ்கில் ஐஷூ, ஜோவிகா, தினேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில் களத்தில் இறங்கிய உடனேயே தினேஷ் போட்டியை முடித்து வைத்து வெற்றி பெற்றார். இந்த சீசன் முழுவதும் பிக்பாஸ் வீடு ஸ்மால் பாஸ் வீடு என இரண்டாக பிரிந்திருந்த வீடு தீபாவளி ஸ்பெஷலாக ஒன்று சேர்ந்தது. எனவே போன சீன்களை போல கிச்சன் டீம், வெஸல் வாஷிங் டீம், பாத்ரூம் க்ளீனிங் டீம், ஹவுஸ்கீப்பீங் டீம் என்று நான்கு அணிகள் பிரிக்கப்பட்டன. மேலும் தீபாவளி ஸ்பெஷலாக டாஸ்கில் ஜெயித்தால் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட உணவு வழங்கப்படும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

அரை சதம் அடிக்கப்போகும் பிக்பாஸ் வீடு.. விதி மீறல்களில் ஈடுபடும் போட்டியாளர்கள்.. தட்டிக் கேட்பாரா கமல்?

இதற்காக விளக்குகளுக்கு வண்ணம் செய்யும் டாஸ்க் வழங்கப்பட்டது. இந்த டாஸ்கில் வெற்றிபெற போட்டியாளர்கள் கடுமையாக போராடியும் இறுதியில் தோற்றனர். சிறப்பு விருந்தினர்கள் வந்ததால் ஆரவாரத்துடன் காணப்பட்ட பிக்பாஸ் வீட்டில், நாமேஷனை தொடங்கி மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வந்தார் பிக்பாஸ். இந்த நாமினேஷன் பிரசாஸில் கானா பாலா, விக்ரம், அக்ஷயா, மணி, ரவீனா, பிராவோ, விச்சித்ரா மற்றும் பூர்ணிமா ஆகியோர் இடம் பெற்றனர்.

இந்த வாரம் வீட்டில் இருக்கும் மொத்த போட்டியாளர்களுக்கு தண்டனை குடுக்க வேண்டுமென பிக்பாஸ் நினைத்தாரோ என்னவோ, காலை உணவாக ஒரு வாரத்திற்கு ரவா உப்புமாதான் சாப்பிட வேண்டுமென மக்களின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டதாக அறிவித்தார். எனவே ஒருவாரம் காலை உணவு உப்புமாதான். இதன் தொடர்ச்சியாக இந்த வார ஷாப்பிங் பில்லை மீண்டும் செலுத்துவதற்கான நேரம் வந்தது. இதற்கான டாஸ்கில் தோற்றால் பிக்பாஸ் வீட்டின் Bedroom மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த டாஸ்கில் மாயாவும் பூர்ணிமாவும் இறுதி வரை தாக்குப்பிடித்தாலும், பிராவோவும் நிக்சனும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் டாஸ்க்கில் வீட்டார் தோற்றதாக பிக்பாஸ் அறிவித்தார்.

கதவு சாத்தும் வேலையை விக்ரமிடம் கொடுத்தார் பிக்பாஸ். இதில் ‘பெட்ரூம் கதவை மூடுங்க விக்ரம்’ என பிக்பாஸ் கூறியதும் ‘ஏன் பிக் பாஸ்’ என கேட்டுக்கொண்டே சென்ற விக்ரம், பொறுப்பான வேலையை பொறுப்பான ஆளுங்க கிட்டதான் கொடுப்பாங்க என தனக்குத்தானே சமாதானம் கூறி கொண்டார். இந்த வாரம் தங்களது பங்கும் இருக்கவேண்டும் நினைத்த ரவீனாவும், மணியும் - கூல் சுரேஷ் போல் பேசிக்கொண்டும், ரவீனா வேடம் அணிந்து கொண்டும் வலம்வந்தனர். இதை கண்டதும் பிக்பாஸ்க்கு ஒரு ஐடியா வந்தது. ‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்கை அறிவித்தார். இதற்காக ஆண்கள் பெண்களை போலவும் பெண்கள் ஆண்களை போலவும் மாற வேண்டும்.

அரை சதம் அடிக்கப்போகும் பிக்பாஸ் வீடு.. விதி மீறல்களில் ஈடுபடும் போட்டியாளர்கள்.. தட்டிக் கேட்பாரா கமல்?

ஆண்களில் ஒருவர் கூடுதலாக இருப்பதால் சுவாரஸ்யமற்ற ஒரு நபரை தேர்வு செய்யும்படி போட்டியாளர்களிடம் பிக்பாஸ் கூறினார். இந்த டாஸ்க்குக்கு தினேஷ் சரிப்பட்டு வரமாட்டார் என பெண்கள் தரப்பில் கூறப்பட்டது. டாஸ்க் தொடங்கப்பட்டது. ஒவ்வொருவரும் தாங்கள் ஏற்றிருந்த கேரக்ட்டர்களின் பெயர்களை பேட்ஜ் ஆக அணிந்திருந்தனர். தினேஷை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்த பிக் பாஸ், அவருக்கு ஒரு சீக்ரெட் டாஸ்க் வழங்கினார். இந்த சீக்ரெட் டாஸ்கில் தாங்கள் கேட்டிருக்கும் கெரக்டர் மாறாமல் செயல்படும் போட்டியாளருக்கு கோல்ட் ஸ்டார் வழங்கப்படும் எனவும் பிக்பாஸ் கூறினார்.

இதையடுத்து, இந்த வார டாஸ்க் பற்றிய விவரித்த தினேஷ் தாங்கள் ஏற்றுள்ள கதாபாத்திரம் வீட்டில் செய்த ஒரு முக்கியமான தருணத்தை எடுத்துக்கூறவேண்டும் என அறிவித்தார். தொடர்ந்து தனது சீக்ரெட் டாஸ்கையும் தினேஷ் தொடங்கினார். அக்ஷயா மாதிரி பண்றீங்களா, ஒரு மலையாள வார்த்தையாவது வந்ததா? என கானா பாலாவை சீண்டிய தினேஷிடம், விஷ்ணு குரல் உயர்த்த தொடங்கினார். பொறுக்கி, அமுல் பேபி என பல வார்த்தைகளை உபயோகித்து இருவரும் சண்டையிட்டு கொண்டனர். இதனிடையே டாஸ்கின் பர்ஃபாமன்ஸும் ஒரு வழியாக முடிந்தது. விச்சித்ராவாக நடித்த நிக்சனும், நிக்சனாக நடித்த ஜோவிகாவும் வாக்கெடுப்பின் அடிப்படையில் வெற்றி பெற்றனர்.

இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட சீக்ரெட் டாஸ்க் குறித்து விவரித்தார் தினேஷ். அக்ஷயவாக நடித்த கானா பாலா சரியாக நடிக்கவில்லை என்று தினேஷ் கூறவே, அக்ஷயாவாக தினேஷ் வேடமணிய வேண்டும் என்றும், பூர்ணிமா தினேஷின் வேடம் போடவேண்டும் என்றும் பிக்பாஸ் கூறினார். இந்த டாஸ்கால் கடுப்பான விசித்ராம் ‘நான் அம்மா போல யாரிடமும் நடிக்கவில்லை, இனிமேல் என்னை விசித்ரா mam என்று அனைவரும் அழையுங்கள்..’ என்று கூறினார். இதற்கு பதிலளித்த பூர்ணிமா, என்னை நீங்கள் பூர்ணிமா mam என்று அழையுங்கள் என்று வாதம் செய்தார்.

‘உன்னைப் போல் ஒருவன்’ டாஸ்கின் அடுத்த கட்டம் தொடங்கியது. இதில், யாருடைய கட்டுப்பாட்டில் கிச்சன் நன்றாக செய்யப்படும் என பிக்பாஸ் கேள்வி கேட்க, இரு அணியினரும் வாதம் செய்தனர். இறுதியில் பெண்கள் அணி வெற்றி பெற்றதாக நடுவராக இருந்த கானா பாலா அறிவித்தார். அடுத்ததாக வீடு ஆண்களின் கெப்டன்சியில் சிறப்பாக செய்யப்பட்டதா அல்லது பெண்களின் கெப்டன்சியிலா என கேள்வி கேட்கப்பட்டது. இதில், ஆண்கள் கேப்டன்ஸியில்தான் என தீர்ப்பளிக்கப்பட்டது. மூன்றாவதாக, டைட்டில் ஜெயிக்கப் போவது ஆணா, பெண்ணா என்ற கேள்வி, வெற்றி பெண்களின் அணிக்கே. இதனால் பெண்களாக செயல்பட்டு வெற்றி பெற்ற ஆண்கள் அணியில் ஒரு நபரை தெர்ந்தெடுத்து ஸ்டார் வழங்கும்படி பிக்பாஸ் கூறினார். இதில் மணிக்கு ஸ்டார் வழங்கப்பட்டது.

அரை சதம் அடிக்கப்போகும் பிக்பாஸ் வீடு.. விதி மீறல்களில் ஈடுபடும் போட்டியாளர்கள்.. தட்டிக் கேட்பாரா கமல்?

இந்த வாரம் அக்ஷயாவும், விக்ரமும் வெளியேற்ற படலாம் என பூர்ணிமாவிடம் சொல்லி கொண்டிருந்தார் விஷ்ணு. மறுபுறம் நீங்கள் தான் டைட்டில் வின்னர் என விசித்ராவிடம், மாயா பேசி கொண்டிருந்தார். அடுத்ததாக, "இந்த வாரத்தில் சிறப்பாகச் செயல்பட்ட மூன்று நபர்களைத் தேர்ந்தெடுக்கும் படி பிக்பாஸ் கூறினார். இதில், தினேஷ், கூல் சுரேஷ், நிக்சன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு நடுவே அடுத்தவார கேப்டன்சிக்கான போட்டி நடைபெற்றது. இதிலும் தினேஷ் வெற்றி பெற்று இரண்டாவது முறை கேப்டனாக தேர்வானார்.

இதேபோல, இரண்டு மோசமான பங்கேற்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்படி பிக்பாஸ் கூறினார். இதில் பெரும்பாலானோர் விசித்ரா மற்றும் அர்ச்சனாவின் பெயர்கள் கூறி இருந்தனர். எனவே அவர்கள் Worst Performer ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறைக்கு செல்லவேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ‘நாங்கள் Worst Performer இல்லை; எங்களால் சிறை செல்ல முடியாது..’ என விசித்ராவும் அர்ச்சனாவும் கார்டன் ஏரியாவில் அமர்ந்து கொண்டனர். விதிமுறையை பின்பற்றாததால் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என போட்டியாளர்கள் அனைவரையும் தினேஷ் கலந்தாலோசித்தார்.

அப்போது சிலர் உணவு வழங்க வேண்டும் என கூறவே இந்த ஆலோசனையின் இறுதியில் உணவு, மருந்து ஆகியவற்றை வழங்குவோம்; ஆனால் அவர்கள் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் வர கூடாது Restroom செல்ல வேண்டும் என்றால் சிறைக்கு சென்று வரட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. எனினும் அவர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபடவே, ஸ்மால் பாஸ் வீட்டு Restroom-க்கு அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கேப்டன் கார்டன் ஏரியாவில் வந்து தூங்கவே, போட்டியாளர்கள் ஓவ்வொருவராக கார்டன் ஏரியாவில் தூங்கினர். இதனால் விசித்ராவும் அர்ச்சனாவும் சிறை சென்றனர்.

அரை சதம் அடிக்கப்போகும் பிக்பாஸ் வீடு.. விதி மீறல்களில் ஈடுபடும் போட்டியாளர்கள்.. தட்டிக் கேட்பாரா கமல்?

இதையடுத்து நேற்றைய நிகழ்ச்சியில் மரியாதை குறித்து பேச தொடங்கிய கமல், மரியாதை என்றால் என்ன? என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மரியாதையை கொடுத்துதான் பெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகவே காணப்பட்டது. அதேபோல கமலும், மரியாதை என்பதைக் கொடுத்துதான் பெற முடியும் என்று விசித்ராவுக்கு எடுத்துரைத்தார். மேலும், விசித்ரா, ரவீனா ஆகியோர் saved என்றும் நேற்றைய நிகழ்ச்சியில் கமல் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது. வீட்டில் சும்மாவே இருக்கும் அக்ஷயா அல்லது விக்ரம் இருவரில் ஒருவர்தான் போவார்கள் என்று ஒருபக்கம் கூறப்பட்டாலும், மறுபுறம் கானா பாலா வெளியேற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் விதி மீறலில் ஈடுபட்ட விசித்ரா மற்றும் அர்ச்சனாவிடம் கமல் கடிந்து கொள்வது போன்ற ப்ரோமோக்கள் வெளியாகி உள்ளன. worst performer என்று கூறியதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் கமலிடம் தெரிவிக்கவே, அப்போ நிஜமாகவே யார் worst performerன்னு நீங்க நினைக்குறிங்க என்று கமல் கேட்கிறார். இதற்கு இருவருமே கானா பாலா மற்றும் பிராவோ என்று பதில் அளிக்க, அப்போ நீங்க plan பண்ணி செயல்படுறீங்களா? என்ற சரமாரியான கேள்வியை கமல் கேட்பதை காண முடிந்தது. போன வாரம் சற்று பொறுமையாகவே எடுத்துரைத் கமல் இந்த வாரம் போட்டியாளர்களை கடுமையாக கண்டிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

சீ. ரம்யா

banner

Related Stories

Related Stories