Cinema
குழந்தைக்கு மூளையில் கட்டி... GV பிரகாஷ் செய்த நெகிழ்ச்சி : பின் தொடரும் ரசிகர்கள் - குவியும் பாராட்டு!
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசையில் மட்டுமின்றி பிரபல நடிகராக அறியப்படுகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் நடிப்பில் 'அடியே' என்ற படம் வெளியானது. தற்போது இடிமுழக்கம், 13, கள்வன், ரிபல், டியர் என கைவசம் படங்களை வைத்திருக்கிறார். இவர் திரைத்துறை மட்டுமின்றி, அவ்வப்போது சமூக நலன் சார்ந்த விஷயங்களுக்கும் குரல் எழுப்பி வருகிறார்.
தொடர்ந்து சமூக நலன் சார்ந்த விஷயங்களையும் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது சிறுவன் ஒருவரது மூளையில் இருக்கும் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சைக்காக பண உதவி செய்துள்ள சம்பவம் அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இவரது இந்த செயலை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அதாவது, இணையவாசி ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், "ஆன்லைன்ல பண உதவி கேக்குறதுக்கு பயமா இருக்கு.. இருந்தாலும் கேக்குறேன். என் அக்கா பையனுக்கு (1 வயசு) சிறு மூளை பக்கத்துல கட்டி இருக்குன்னு சொல்றாங்க. கொஞ்சம் பயமா தான் இருக்கு.. நேத்து நைட்டு இராம்நாட்ல இருந்து மதுரை Appollo ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனோம்..
அவங்க என்னன்னா உடனே ஆப்பரேஷன் பன்னனும்னு சொல்றாங்க.. 3.5 To 4 லட்சம் வரை ஆகும்னு சொல்றாங்க.. எங்க ஃபேமிலி சைடு இருந்து 2 லட்சம் வரை ரெடி பண்ணிட்டேன். கொஞ்சம் டைம் கொடுத்தா கூட அங்க இங்க னு எப்டியாச்சும் ரெடி பன்னிருவேன்.. உடனே பன்ன சொல்றாங்க.. உங்களால எதாச்சும் முடிஞ்சா பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்.. " என்று குறிப்பிட்டி உதவி கேட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்று (24 நவம்பர்) வெளியான இந்த பதிவையடுத்து ஜி.வி.பிரகாஷ், தன்னால் முடிந்த தொகையை வழங்கியுள்ளார். இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ள பதிவில், "எனது தரப்பில் இருந்து சிறிய உதவி.." என்று குறிப்பிட்டு ரூ.75,000 உதவியாக வழங்கியிருந்தார். இதுகுறித்த புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.
ஜி.வி.பிரகாஷின் இந்த உதவியை பலரும் தங்கள் இணையத்தில் பாராட்டி வரும் நிலையில், சிலர் இதனை விளம்பரப்படுத்துவதாக விமர்சித்து வருகின்றனர். எனினும் தான் உதவி செய்ததாக இவர் வெளியிட்டுள்ள பதிவை தொடர்ந்து, பலரும் ரூ.100, ரூ.500 என தங்களால் முடிந்த பண உதவியை அந்த சிறு குழந்தைக்காக செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!