Cinema

கேரள பல்கலையில் இசைக் கச்சேரி... கூட்ட நெரிசலில் சிக்கி 50 மாணவர்களுக்கு நேர்ந்த சோகம் !

கேரளாவின், கொச்சியில் அமைந்துள்ளது குசாட் (CUSAT) பல்கலைக்கழகம். கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமான இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இடங்களில் இருந்தும் மாணவர்கள் பலரும் படித்து வருகின்றனர். அதில் சிலர் விடுதியில் தங்கியும் படித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இங்கு Tech Fest என்ற பெயரில் விழா ஒன்று நடைபெற்று வந்துள்ளது. கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இந்த விழாவில் சில திரைக்கலைஞர்கள் பங்கேற்று சிறபித்தனர். மேலும் மாணவர்கள் பலரும் இதனை மிகவும் சிறப்பாக கொண்டாடினர். பல்கலை., மாணவர்கள் மட்டுமின்றி அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வெளியே இருந்தும் வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று இந்த விழாவில் பிரபல பாடகி நிகிதா காந்தியின் (Nikhita Gandhi) இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அங்கிருக்கும் தனி அரங்கில் நடைபெற்று வந்த இவரது இசை நிகழ்ச்சியை மாணவர்கள், ரசிகர்கள் என பலரும் கண்டுகளித்தனர். அந்த சமயத்தில் திடீரென மழை பெய்ததால், வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்களும் அரங்குக்குள் சென்றுள்ளனர்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மாணவர்கள் பலரும் மூச்சு திணறல் காயம் என ஏற்பட்டுள்ளது. அதில் 4 மாணவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிகிதா காந்தி

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் நிகிதா காந்தி (32). தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமாக அறியப்படுகிறார். தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் "சும்மா சுர்ருன்னு.." என்ற பாடலை பாடியுள்ளார். தொடர்ந்து தற்போது இந்தி உள்ளிட்ட மொழி பாடல்களை பாடி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

Also Read: குழந்தைக்கு மூளையில் கட்டி... GV பிரகாஷ் செய்த நெகிழ்ச்சி : பின் தொடரும் ரசிகர்கள் - குவியும் பாராட்டு!