Cinema
‘கலைஞர் 100’ விழா.. தயாராகும் தமிழ் திரையுலகம்.. என்னென்ன திட்டங்கள்? : ஆர்.கே.செல்வமணி பேட்டி !
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தற்போது தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு வருகிறது.
அதே போல, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக பல்வேறு பங்கை ஆற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்கமுடியாத சின்னமாக கலைஞர் திகழ்ந்து வருகிறார். அதனை போற்றும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இந்த விழாவில் தமிழ் திரைப்படத் துறையினர் மட்டுமில்லாமல் இந்திய திரைப்பட துறையினர் அனைவரையும் ஒன்றுபட முயற்சி செய்து வருவதாக FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "தமிழ் திரைப்படத்தில் அனைத்து சங்க உறுப்பினர்களையும் ஒரே மேடையில் அமர வைத்துள்ளார் அதற்கு முதலில் கலைஞருக்கு நன்றி.
டிசம்பர் மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது. இந்த விழாவை இந்தியாவிலேயே சிறந்த நிகழ்ச்சியாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இவர் வருவாரா, அவர் வருவாரா என இல்லாமல், திரைத்துறையினர் 100% வரை அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
ரஜினி, கமல் உள்ளிட்டோரை அழைத்துள்ளோம். விஜய், அஜித் ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளோம். கலைஞர் நூற்றாண்டு விழாவில் 20 நிகழ்ச்சிகளை வடிவமைத்துள்ளோம். ஃபெப்சி சங்கத்தின் சார்பாக அனைத்து வேலைகளையும் நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். எங்களுக்கு பணம் அதற்கு தேவையில்லை.
திரைப்படம் மட்டுமில்லாமல் சமுதாயத்திற்கு சமூக நீதி, சமத்துவபுரம், உழவர் சந்தை, கை ரிக்ஷா ஒழிப்பு போன்ற சிந்தனைகளை சிந்தித்து அமல்படுத்திய கலைஞருக்கு, இந்த விழாவை முன்னெடுப்பது தான் நம் நன்றி. தமிழ் திரைப்படத் துறையினர் மட்டுமில்லாமல் இந்திய திரைப்பட துறையினர் அனைவரையும் ஒன்றுபட முயற்சி செய்து வருகிறோம்." என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்