Cinema

கொலை மிரட்டல் விடுத்த அயோத்தி சாமியார்.. ஷாருக்கானுக்கு Y+ பாதுகாப்பு கொடுத்த மகாராஷ்டிரா அரசு - பின்னணி?

பிரபல பாலிவுட் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் 'பதான்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் இந்தாண்டு ஜனவரி மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல வரவேற்பை பெற்ற பாலிவுட் படம் என்ற பெயரை இந்த படம் பெற்றது.

உலகம் முழுக்க சுமார் 100 நாடுகளில், 2500 திரையரங்குகளில் 8,000 ஸ்க்ரீன்களிலும், அதில் இந்தியாவில் 5,500 ஸ்க்ரீன்களிலும் திரையிடப்பட்டது. இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.100 கோடி தாண்டியது. இதனிடையே மெகா ஹிட் கொடுத்த இந்த படத்திற்கு இந்துத்வ அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து வந்தனர். அதாவது படம் வெளியாவதற்கு முன்பே, 'Besharam Rang' என்ற பாடல் வெளியானது. தமிழில் 'அழையா மழை' என்ற பெயரில் இந்த பாடல் வெளியானது.

இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும், இந்த பாடல் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியது. ஏனெனில் இந்த பாடல் முழுவதும் தீபிகா, பிகினி உடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். அதோடு அவர் ஆரஞ்சு கலர் துணியில் பிகினி உடை அணிந்துள்ளார். அதனை இந்துத்துவ கும்பல் தங்களது பெருமைக்குரிய காவி உடையை அவமதிக்கும் செயலில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்து வந்தனர். அதோடு ஷாருக், தீபிகா உருவப்படம் எரிப்பு, செருப்பு மாலை அணிவிப்பு உள்ளிட்ட பல்வேறு மோசமான செயல்களில் இந்து அமைப்பினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்துத்வ கும்பல் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் மாஸ் ஹிட் கொடுத்தது. இருப்பினும் ஷாருக்கானுக்கு இந்துத்வ கும்பல் கொலை மிரட்டல் விடுத்தது. தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த நிலையில், கடந்த ஆண்டுஅயோத்தி சாமியாரான பரமஹன்ஸ் ஆச்சார்யா என்பவர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேசிய அவர், "காவியை எதிர்ப்பவர்களை சும்மா விடமாட்டோம். இப்போது ஷாருக்கானின் படத்தை இருக்கிறோம். ஆனால் அந்த இஸ்லாமியரை நேரில் பார்த்தல் உயிரோடு எரித்து விடுவேன்" என்று பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்தார்.

இதைத் தொட்ர்ந்து மீண்டும் ஷாருக்கிற்கு தொட்ர்ந்து கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து தற்போது நடிகர் ஷாருக்கானுக்கு Y+ பாதுகாப்பு வழங்கி மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read: BIGGBOSS வீடு : “படிப்பு முக்கியம் இல்லையா?..” - இணையத்தில் விவாதப் பொருளான கல்வி !