Cinema
“என் அனுமதி இல்லாமல்...” : பாலியல் தொல்லைக்கு பிரபல நடிகை.. நடன கலைஞர் மீது பரபர புகார் !
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை சேர்ந்தவர் சயந்திகா பானர்ஜி (Sayantika Banerjee). 37 வயதுடைய இவர் அங்கு பிரபல நடிகையாக அறியப்படுபவர். தொலைக்காட்சியில் அறிமுகமாகி பின்னர், பெங்காலி திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்த தற்போதும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் தற்போது இணைந்திருக்கிறார். 2021-ம் ஆண்டு அங்கே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார். இருப்பினும் தனது முக்கிய பணியாக இவர் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த சூழலில் இவர் நடன கலைஞர் ஒருவர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தனியார் ஊடகத்தின் நேர்காணலில் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சயந்திகா, அவரது அடுத்த படமான 'சாயாபஜ்' (Chayabaj) என்ற படத்தின் படப்பிடிப்புக்காக வங்க தேச நாட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவருக்கு நடனம் சொல்லி கொடுக்க மூத்த நடன கலைஞர் ஒருவர், பணத்தினால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெளியேறிவிட்டார். இதனால் மைக்கேல் என்ற இளைஞர் ஒருவர் நடனம் சொல்லி கொடுக்க வந்தார். அந்த நபர் சயந்திகா அனுமதி இல்லாமல் அவரது கையை பிடித்து அத்துமீறியுள்ளார். இதனால் அந்த ஷூட்டிங்கை அனைவர் முன்பும் ரத்து செய்துள்ளார்.
மேலும் தயாரிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்றபோது, அதுவும் முடியாமல் போனது. அதோடு அவருக்கு யாரும் அங்கே துணையாக இல்லை என்று தெரிகிறது. இதனால் ஷூட்டிங்கை விட்டுவிட்டு அவர் இந்தியா திரும்பியுள்ளார். நடிகையும் அரசியல்வாதியுமான சயந்திகாவின் இந்த பேட்டி தற்போது திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்