Cinema
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. திரையுலகத்தினர் அதிர்ச்சி!
'காதலில் விழுந்தேன்', 'அங்காடித் தெரு' போன்ற படங்களில் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகப் பிரபலமானவர் விஜய் ஆண்டனி. பின்னர் 'நான்', 'சைத்தான்','பிச்சைக்காரன்' உள்ளிட்ட படங்களிலும் கதாநாயகனாக நடித்துள்ளார்.
மேலும் படங்களுக்கு இசையமைப்பதை நிறுத்திவிட்டு தற்போது நடிப்பதில் மட்டமே கவனம் செலுத்தி வருகிறார். சில படங்களையும் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். இவருக்கு மீரா என்ற மகள் இருந்தார். இவர் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு விஜய் ஆண்டனி உணவு முடித்து விட்டு தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். பிறகு அதிகாலை எழுந்து மகள் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது அவர் மகள் தூக்கிட்ட நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு வீட்டின் பணியாளர்கள் உதவியுடன் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த மீரா மன அழுத்தத்திலிருந்தது தெரியவந்ததுள்ளது. நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?