Cinema
“நேரில் பார்த்தால் கன்னத்தில் அறைவேன்” : பாக். நடிகை ஆவேசம் - வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட கங்கனா!
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். பா.ஜ.க ஆதரவாளரான இவர் சர்ச்சையான கருத்துகளைப் பேசி பிரச்னையில் சிக்கிக்கொள்வதையே சமீபகாலமாக வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
அந்தவகையில், கடந்த ஆண்டுகளில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய கங்கனா ரனாவத் சுதந்திர போராட்ட வீரர்ளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் “1947ல் கிடைத்தது பிச்சை; 2014ல் கிடைத்ததுதான் உண்மையான சுதந்திரம்” எனப் பேசியுள்ளார். பா.ஜ.கவினரே கங்கனா ரனாவத்தின் இத்தகைய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாஜக ஆதரவு கருத்துத் தெரிவித்தாக கூறி, சிறுபான்மையினருக்கு எதிராக வன்ம கருத்துகளை அவதூறுகளையும் பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அதுமட்டுமல்லாது பாகிஸ்தான் குறித்து தொடர்ந்து பல்வேறு அவதூறு கருத்துகளை கங்கனா ரனாவத் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில், “நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை அறைவேன்.” என பாகிஸ்தான் பிரபல நடிகை நவுஷீன் ஷா ஆவேசமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து நடிகை நவுஷீன் ஷா வெளிட்டுள்ள வீடியோ பதிவில், “நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை அறைவேன்.
அவர் எங்கள் நாட்டைப் பற்றி கேவலமாக பேசி வருகிறார். பாகிஸ்தான் ராணுவம் குறித்து மிகவும் அபத்தமான கருத்துகளை கூறுகிறார். அவருக்கு அறிவே கிடையாது. மற்ற நாட்டைப் பற்றி எதற்காக பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள்.
உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்.” என காட்டமாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, மேலும் பலரும் நடிகை கங்கனா ரனாவத்தை கண்டித்து வருகின்றனர்.
Also Read
-
“Blast இல்லை Waste .. முக்கிய வாக்குறுதிகள் பற்றி மூச்சே விடாத பட்ஜெட்” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க அரசின் நிதிநிலை அறிக்கை: இதிலும் திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய விஜய்!
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !