Cinema
மாவீரன், ஜெயிலரை தொடர்ந்து தமிழ் படங்களில் பிசியான தெலுங்கு காமெடி நடிகர்.. அடுத்து என்ன படம் தெரியுமா?
தெலுங்கில் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர்தான் சுனில். 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் தற்போது பிசியாக உள்ளார். 2007-ல் வெளியான திரு ரங்கா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியானது. தொடர்ந்து தெலுங்கு படத்தில் மட்டுமே பிசியாக நடித்து வந்த இவர் தற்போது தமிழிலும் அறிமுகமாகியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றார். இதைத்தொடர்ந்து கண்டது 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து தற்போது அவரது கைவசம் தெலுங்கில் புஷ்பா 2, கேம் சேஞ்சர், குண்டூர் காரம் ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில், தமிழில் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’, கார்த்தியின் ‘ஜப்பான்’, ஈகை ஆகிய படங்களையும் தனது கைவசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் இவர் இணையவுள்ளார்.
அதன்படி ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் ‘புல்லட்’ என்ற படத்தை இன்னிசை பாண்டியன் இயக்குகிறார். இந்த படத்தில் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழில் 6-வது படத்தில் சுனில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!