சினிமா

“கொஞ்சம் Dance காவாலா..” - தமன்னாவுக்கு டஃப் கொடுத்த முதியவர்.. தியேட்டரில் Vibe செய்யும் வீடியோ வைரல் !

காவாலா பாடலுக்கு முதியவர் ஒருவர் திரையரங்கில் வைத்து நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

“கொஞ்சம் Dance காவாலா..” - தமன்னாவுக்கு டஃப் கொடுத்த முதியவர்.. தியேட்டரில் Vibe செய்யும் வீடியோ வைரல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் 'ஜெயிலர்'. பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில்,கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

“கொஞ்சம் Dance காவாலா..” - தமன்னாவுக்கு டஃப் கொடுத்த முதியவர்.. தியேட்டரில் Vibe செய்யும் வீடியோ வைரல் !

கடந்த சில படங்களை ஒப்பிட்டு பார்க்கையில் ரஜினிக்கு இந்த படம் பெரிய அளவு வரவேற்பை கொடுத்து வருகிறது. இந்த படத்தின் 'காவாலா.." பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், இந்த பாடலுக்கு ரீல்ஸ் என மக்கள் வைப் செய்து வரகின்றனர்.

அந்த வகையில் 60 வயது முதியவர் ஒருவர் இந்த பாடலுக்கு நடனமாடுவது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ எடுக்கப்பட்டது எந்த ஊர், திரையரங்கம் என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஆனால் ஜெயிலர் படம் திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும்போது அந்த பாடல் வந்த போது, முதியவர் தன்னை மறந்து எழுந்து நின்று ஆடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories