Cinema
மாமன்னன் : “இன்னும் அதிலிருந்து மீள முடியவில்லை..” - 1 மாதம் கழித்து Review சொன்ன லோகேஷ் கனகராஜ் !
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம்தான் 'மாமன்னன்'. கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றிநடை போட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சாதிய பாகுபாட்டை அரசியல் கலந்து கூறும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் எழுந்தது.
இந்த படத்தை பார்த்த திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். தொடர்ந்து இந்த படம் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. உதயநிதி, வடிவேலு, பகத் என அனைவரது நடிப்பையும் மக்கள் வெகுவாக பாராட்டினர். மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் இன்னமும் ஒரு சில திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் கடந்த 27-ம் தேதி மாமன்னன் திரைப்படம் Netflix ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. Netflix-ல் ட்ரெண்டிங் நம்பர் 1 இடத்தில் இந்த படம் இருப்பதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இயக்குநர் மாரி செல்வராஜ் ட்வீட் செய்திருந்தார். தொடர்ந்து இந்த படம் தற்போது வரை மக்களிடம் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாமன்னன் வெளியாகி ஒரு மாதம் ஆகிய நிலையில், இந்த படத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவரது ட்விட்டர் பதிவில், “நான் மிகவும் லேட்டாக விமர்சனம் கூறிகிறேன் என எனக்கு தெரியும். இருப்பினும் 'மாமன்னன்' படம் பார்ப்பதற்கு அருமையாக இருந்தது. படத்தின் எல்லா துறைகளிலும் நேர்த்தியான வேலைபாடுகள் தெரிகிறது. இன்னமும் அந்த படத்தில் இருந்து முடியவில்லை” என்று குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படத்தில் நடித்த உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்திசுரேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையையும் ஆகியோருக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் 'லியோ' படத்தை இயக்கியுள்ளார். அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் இறுதியில் லியோ படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
-
மதுரை, மேலமடை பகுதியில் ரூ.150 கோடியில் “வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்” - திறந்து வைத்தார் முதல்வர் !