Cinema

Kalki 2898AD: “நிறுத்துங்க கமல்.. படத்துல மட்டும் நடிங்க, இங்க வேண்டாம்”-அமிதாப் செயலால் அதிர்ந்த அரங்கம்

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'Project K'. நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்துக்கு 'கல்கி 2898 AD' (Kalki 2898 AD). சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் கமல் ஹாசன், அமிதாப் பச்சான், தீபிகா படுகோனே, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். Science Fiction படமாக உருவாகும் இந்த படத்தில் கமல் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில், இதன் கிளிம்ப்ஸ் வீடியோ கலிபோர்னியா சான் டியாகோவில் நடைபெற்ற 'San Diego Comic-Con International' நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் ராணா, கமல், நாக் அஸ்வின், பிரபாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிலையில், அமிதாப் பச்சன் வீடியோ கால் மூலம் கலந்துகொண்டார். தொடர்ந்து இதில் பேசிய நடிகர் கமல், "சினிமாவுக்கு மிகப்பெரிய ஆற்றலைக் கொடுப்பது பார்வையாளர்கள்தான். நாங்கள் கதைகளை உருவாக்குகிறோம், ரசிகர்கள் நட்சத்திரங்களை உருவாக்குகிறார்கள். அமிதாப் பச்சன் நடிப்பையும், பிரபாஸ் நடிப்பையும் பார்க்கும் போது நமக்கு அது புரியும். அவர்களுடன் படத்தில் நடித்திருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது" என்றார்.

கமல் பேசிக்கொண்டிருந்த வேளையில் இடைமறித்த நடிகர் அமிதாப், "நிறுத்துங்கள் கமல்.. எளிமையாக இருப்பதை விடுங்கள். படப்பிடிப்பில் மட்டும் நடியுங்கள், இங்கு வேண்டாம். நீங்கள் எங்களை விட பெரிய ஸ்டார். கமல் செய்த சாதனைகளையும், அவர் தொட்ட உயரத்தையும் தொடுவது அவ்வளவு எளிதல்ல." என்றார்.

இதைத்தொடர்ந்து தனது உரையை மீண்டும் தொடர்ந்த கமல் அமிதாப் பச்சனின் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியது குறித்த நினைவுகளை பகிர்ந்தார். இதுகுறித்து பேசிய கமல், "அமிதாப் நடித்த 'Sholay' படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். ஆனால் அந்த படத்தை நான் பார்த்தபோது, எனக்கு பிடிக்கவில்லை. இரவு முழுவதும் தூக்கமும் வரவில்லை.

உண்மையில் அது ஒரு சிறந்த படம். இதுபோன்ற நிறையத் திரைப்படங்களை அமிதாப் செய்துள்ளார். அவர் என் படங்களைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறுவது நான் நினைத்துப் பார்க்காத ஒன்று" என்று பேசினார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: TTF வாசனின் அறிமுக பாடலை பாடிய அனிருத் ? - ‘மஞ்சள் வீரன்’ படம் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் ஷாக் !