Cinema
”என்னை CSK அணியில் சேர்த்துக்குங்க”.. வாய்ப்பு கேட்ட நடிகர் யோகி பாபு: தோனி சொன்ன பதில் என்ன?
இந்திய அணியின் சிறந்த கேப்டனாக இருந்தது யார் என்று கேட்டால் உடனடியாக நினைவுக்கு வருபவர் மகேந்திர சிங் தோனிதான். இவர் கேப்டனாக பதவியேற்ற பிறகுதான், இந்திய அணியை மிகப்பெரிய உச்சத்திற்குக் கொண்டு சேர்த்தார். தோனியின் தலைமையில் இந்திய அணி 2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று விதமான போட்டிகளிலும் கோப்பை வென்றது.
பின்னர் இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐ.பி.எல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் சென்னையின் எஃப்.சி கால்பந்து அணியின் உரிமையாளராகவும் இவர் உள்ளார். இந்த நிலையில் இவரது 'தோனி எண்டர்டென்மெண்ட்' தயாரிப்பு நிறுவனம் முதல் முறையாகத் தமிழ்ப் படத்தைத்தான் தயாரித்துள்ளது.
Lets Get Married (LGM) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். காமெடி ரோமன்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் தோனி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் யோகிபாபு, "சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்" என தோனியிடம் கேட்டார். இதனால் அங்கு சிரிப்பொலி எழுந்தது.
பின்னர் பேசிய தோனி, ராயுடு ஓய்வு பெற்றுவிட்டதால் CSKவில் உங்களுக்கு இடம் உண்டு. நான் உங்களுக்கான அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். நீங்கள் கன்சிஸ்டியுடன் விளையாட வேண்டும். உங்களை காயப்படுத்தும் வகையில் வேகமாகப் பந்து வீசுவார்கள் என பதிலளித்துள்ளார். இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
Also Read
-
நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு : த.வெ.க தொண்டர் காவல்துறையில் கொடுத்த புகார் என்ன?
-
”பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் கரைபுரண்டோடும் ஊழல்” : மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு!
-
இந்தியா மீதான 50% வரி விதிப்பு அமலுக்கு வந்தது! : அமெரிக்கா - இந்தியா இடையே ஏற்றுமதி பாதிக்கும் அபாயம்!
-
”உண்மையான மக்கள் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் புகழாரம்!
-
முதலமைச்சர் சொன்னதை வழி மொழியும் இரண்டு நீதியரசர்களின் குரல்கள் : முரசொலி!