Cinema
“ஒரு அற்புதமான விடுமுறையில் 5 நிமிடத்தை வீணடித்துவிட்டேன்..” - விவாகரத்து குறித்து நடிகை அசின் விளக்கம் !
மலையாள நடிகையான அசின், 2001-ம் ஆண்டு 'Narendran Makan Jayakanthan Vaka' என்ற மலையாள படத்தில் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் நடித்த இவர், தமிழில் 2004-ம் ஆண்டு 'எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி' படத்தில் அறிமுகமானார். ஜெயம் ரவி, நதியா, பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்துள்ள இந்த படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை பெற்று தந்தது.
தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்டார். இதைத்தொடர்ந்து தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவே, அஜித்துடன் வரலாறு, ஆழ்வார்; விஜயுடன் சிவகாசி, போக்கிரி, காவலன்; சூர்யாவுடன் வேல், கஜினி; விக்ரமுடன் மஜா என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவருக்கு என்று தமிழில் தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர், இறுதியாக 'காவலன்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் இவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து இவர் இறுதியாக நடித்த படம் இந்தியில் 2015-ல் வெளியான All Is Well என்ற படமாகும். இதையடுத்து இவர் நடிப்பதில் இருந்து விலகினார்.
இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு பிரபல தொழிலதிபரான ராகுல் ஷர்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் திரையுலகில் இருந்து மொத்தமாக விலகி தனக்கென தனி வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். அவ்வப்போது சில விளம்பரங்களில் நடித்து வந்த இவருக்கு தற்போது ஒரு பெண் குழந்தை உள்ளது.
எனினும் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் இன்னமும் திரையில் இவரது வருகைக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். கணவர், குழந்தை, தொழில் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் இவருக்கு விவாகரத்து என அண்மையில் செய்திகள் வெளியானது. மேலும் இவரது கணவர் ராகுலுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும், கூறப்பட்டது.
இந்த செய்தி கடந்த 2 நாட்களாக காட்டுத் தீ போல் இந்திய திரை செய்திகளில் வலம் வந்தது. மேலும் பலரும் இதற்காக கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இந்த செய்திக்கு அசினே தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். விவாகரத்து விவகாரத்திற்கு ஓர் அற்புதமான விடுமுறையின் 5 நிமிடத்தை இதில் வீணடித்தது வருத்தமாக உள்ளது என்று தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இப்போது எங்கள் கோடை விடுமுறையின் நடுவே, ஒருவருக்கு அருகில் ஒருவர் அமர்ந்தபடி, எங்களுக்டைய காலை உணவை ரசித்துக் கொண்டே இந்த கற்பனையான மற்றும் அடிப்படையற்ற செய்தியை படித்துக் கொண்டிருக்கிறோம்.
இது நாங்கள் எங்கள் குடும்பத்துடன் அமர்ந்து எங்கள் திருமணம் குறித்து திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, எங்களுக்கு ‘பிரேக் அப்’ ஆகிவிட்டதாக வந்த செய்தியை நினைவூட்டுகிறது. ஓர் அற்புதமான விடுமுறையின் 5 நிமிடத்தை இதில் வீணடித்தது வருத்தமாக உள்ளது. உங்கள் நாள் சிறப்பானதாக அமையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!