Cinema
ராஷ்மிகாவிடம் ரூ.80 லட்சத்தை ஏமாற்றிய மேலாளர்? - அவரது ரியாக்ஷன் என்ன ? - திரையுலகில் பரபரப்பு !
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து 'கீதா கோவிந்தம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏரளமாக காணப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டு இவர் 'நேஷனல் கிரஷ்'-ஆகவும் ரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு கொண்டாடப்பட்டார். இதைத்தொடர்ந்து தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர், தற்போது இந்தியிலும் நடித்து வருகிறார். அண்மையில் இவரது நடிப்பில் வெளியான வாரிசு, மிஷன் மஞ்சு நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து தற்போது இந்தியில் அனிமல், தெலுங்கில் புஷ்பா 2, ரெயின்போ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த சூழலில் இவரிடம் சுமார் ரூ.80 லட்சம் பணத்தை அவரது மேலாளர் ஏமாற்றிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில் உருவாகும் 'அனிமல்' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகை ராஷ்மிகாவிடம் இருந்து ரூ. 80 லட்சம் பணத்தை அவரது மேலாளர் ஏமாற்றிள்ளார். இந்த சம்பவம குறித்து ராஷ்மிகாவுக்கு தகவல் தெரியவந்ததும், அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளார்.
மேலும் இதனை பெரிது பண்ண விரும்பாமல் வெளியே சொல்லவில்லை என்றும் கூறப்படுகிறது. பல வருடங்களாக அவருடன் பணியாற்றி வரும் மேலாளர், பல வருடங்களாக இது போல் தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து ராஷ்மிகா தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை. இந்த சம்பவத்தால் தற்போது தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!