Cinema
“கனவு நிஜமானது..” முதல்முறை இணையும் வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி.. விஜய் 68 படத்தின் மாஸ் Update !
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பாதி பணிகள் முடிந்த நிலையில், கிளைமாக்ஸ் ஷூட்டிங் மட்டும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் விஜயின் 68-வது படத்தை இயக்கப்போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்தது. தொடர்ந்து இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜ இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது.
முதலில் விஜயின் 68-வது படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், பின்னர் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர்களில் யாரேனும் இயக்குவார் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் விஜயின் 68-வது படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார்.
AGS நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே 2003-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான 'புதிய கீதை' படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன்மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்துக்கு யுவன் இசையமைக்கவுள்ளார். இதனால் இருதரப்பு ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது விஜய் 68-வது படத்தின் அப்டேட் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “கனவு நிஜமானது..” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் விஜய் 68 படம் குறித்த வீடியோ ஒன்றாயும் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!